Ad Code

Responsive Advertisement

7 th PAY COMISSION : வேலை செய்யாத அரசு ஊழியர்களுக்கு 'செக்!'

அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பணித் திறனுக்கேற்ப, ஊதிய உயர்வு வழங்க, ஏழாவது சம்பள கமிஷன் முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக, சம்பளம் வாங்கிக் கொண்டு, வேலை செய்யாமல் இருக்கும் ஊழியர்களுக்கு மத்திய அரசு, 'செக்' வைத்துள்ளது.
பா.ஜ., கட்சியின் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு, தனது இரண்டாவது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின், 14வது நிதிநிலை அறிக்கையில், அரசு ஊழியர்களின் பணித் திறனுக்கேற்ப சம்பள உயர்வு வழங்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
இந்த பரிந்துரையின் அடிப்படையில், ஊழியர்களின் பணித் திறனை அதிகரித்து, ஊக்குவிக்கும் வகையில், அவர்களின் செயல்பாடுகளுக்கு ஏற்ப சம்பள உயர்வு வழங்கவும், எதிர்காலத்தில், ஊழியர்களின் பணித் திறனைப் பொறுத்து, கூடுதல் மதிப்பூதியம் வழங்கவும் சம்பள கமிஷன் திட்டமிட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளுக்கு பொதுவான கவுன்சில் அமைத்து, ஊழியர்களின் ஊதியம் மற்றும் இதர படிகள் குறித்த பொதுவான தேசிய கொள்கையை உருவாக்க வேண்டும் என்று நிதி ஆணையம் கூறியுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement