Ad Code

Responsive Advertisement

TET - ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி: சான்றிதழ் விநியோகம்

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று, இதுவரை சான்றிதழ் பெறாதவர்களுக்கு திங்கள்கிழமை (ஜனவரி 19) முதல் சான்றிதழ் விநியோகம் செய்யப்படுகிறது.

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் 2012-13ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள், தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இதைப் பெரும்பாலான தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், சரியான முறையில் பதிவிறக்கம் செய்யாதவர்களின் சான்றிதழ்கள், அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு விநியோகத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில், 2012-13ஆம் கல்வியாண்டில் 150-க்கு 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து தேர்ச்சி பெற்று, இணையதளம் மூலமாக சான்றிதழ் பதிவிறக்கம் செய்யாத தேர்வர்கள், உரிய சான்றைக் காட்டி வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வரை சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement