Ad Code

Responsive Advertisement

புதிய டிஜிட்டல் மீட்டர் பொருத்த பணம் கொடுக்க வேண்டாம்: மின் வாரியம் அறிவிப்பு

பழைய மின் மீட்டர்களுக்குப் பதில் புதிய டிஜிட்டல் மின் மீட்டர் பொருத்த பொதுமக்கள் பணம் கொடுக்க வேண்டாம் என மின் வாரியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த வாரியம் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தமிழ்நாட்டில் பழைய தொழில்நுட்பத்துடன் இயங்கும் மின் மீட்டர்களை மாற்றி புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய டிஜிட்டல் மின் மீட்டர்களைப் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 2.30 கோடி மின் இணைப்புகளில் ஒரு கோடி மின் இணைப்புகளுக்கு டிஜிட்டல் மின் மீட்டர்கள் பொருத்தும் பணி முடிவடைந்துள்ளது.

இந்தப் புதிய டிஜிட்டல் மின் மீட்டர்களை எவ்விதக் கட்டணமுமின்றி பொருத்த வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பிரிவு அலுவலகத்தில் உள்ள ஆய்வாளர்கள், மின் உதவியாளர்கள் உள்ளிட்டோருக்கு ஆணையிடப்பட்டுள்ளது.

எனவே, புதிய டிஜிட்டல் மின் மீட்டர்களை மாற்ற தமிழ்நாடு மின்சார வாரிய பணியாளர்களுக்கு பொதுமக்கள் எவ்வித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.

புதிய டிஜிட்டல் மின் மீட்டர்கள் மாற்றுவதற்கு யாரேனும் பணம் கேட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிய டிஜிட்டல் மின் மீட்டர்கள் பொருத்துவதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறும், யாரேனும் பணம் கேட்டால் கொடுக்க வேண்டாம் எனவும் பொதுமக்களைக் கேட்டுக் கொள்வதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement