Ad Code

Responsive Advertisement

குவைத் நாட்டில் சமையல், ஓட்டுனர் பணிக்கு ஆட்கள் தேவை - தமிழக அரசு தகவல்

குவைத் நாட்டில் சமையல் மற்றும் ஓட்டுனர் பணிக்கு செல்லவிரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசின் அயல்நாட்டு  வேலைவாய்ப்பு நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குனர் நேற்று வெளியிட்டுள்ள  அறிக்கை:
தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்ககத்தால் தனியார் வேலைவாய்ப்பு முகாம் தொழிலாளர் நலத்துறை  அமைச்சர் மோகன் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் தலைமையில் வருகிற 31ம் தேதி ஜோலார்பேட்டையில் உள்ள அரசினர் பெண்கள்  உயர்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் அரங்கமும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் இடம் பெறும்.  அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன அரங்கில் நிறுவனத்தின் செயல்பாடுகள், தற்போதுள்ள பணி காலியிடங்கள் ஆகிய விவரங்களை அறிந்து  கொள்வதுடன் விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உரிய கட்டணத்தை செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.


தற்போது, குவைத் நாட்டிலுள்ள இந்திய தொலைதொடர்பு துறையில் பணிபுரிய டிப்ளமோ தேர்ச்சியுடன் 3 வருட அனுபவம் பெற்ற சிவில்  மேற்பார்வையாளர்கள், 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் உள்ள கொத்தனார்கள் மற்றும் சமையலர்கள், துவக்கப்பள்ளி தேர்ச்சியுடன்  5 வருட அனுபவம் பெற்ற லேபர்கள், 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்ற ரிக்கர் பணி அறிந்த லேபர்கள், பத்தாம் வகுப்பு  தேர்ச்சி மற்றும் இரண்டு வருட பணி அனுபவத்துடன் 50 வயதிற்குட்பட்ட குவைத் ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள இலகு ரக மற்றும் கனரக வாகன  ஓட்டுநர்கள் மற்றும் டிப்ளமோ தேர்ச்சியுடன் சிவில் பிரிவில் 5 வருட அனுபவம் பெற்ற ஆட்டோகாட் இயக்குபவர்கள் தேவைப்படுகிறார்கள். 

மேலும், சவூதி அரேபிய சுகாதார அமைச்சகத்தின் அரசு மருத்துவ மனைகளுக்கு 2 வருட பணி அனுபவத்துடன் 55 வயதிற்குட்பட்ட அலோபதி  மருத்துவர்கள் மற்றும் பிஎஸ்சி தேர்ச்சி பெற்ற பெண் செவிலியர்களும் தேவைப்படுகிறார்கள். அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின்  செயல்பாடுகள் தொடர்பான விவரங்களை 044-22502267/ 22505886/ 08220634389 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவும் அல்லது  omcmanpower.com என்ற இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement