Ad Code

Responsive Advertisement

கற்றல் திறன் குறித்து கல்வித்துறை ஆய்வு

 பத்தாம் வகுப்பு மாணவர்களின் கற்றல் அடைவுத் திறன் தொடர்பாக, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வு நடத்தப்படுகிறது. மாணவர்கள் எப்படி படிக்கின்றனர்; பாடங்களை எவ்வாறு புரிந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறித்து,

ஆய்வு நடத்துமாறு, தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.,), மாநில அரசுகளை அறிவுறுத்திஉள்ளது. அதன்படி, தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட பள்ளி களில், வரும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஆய்வு நடத்தப்படுகிறது. மொழிப் பாடங்கள், கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களில் ஆய்வு நடக்கும். இதற்கான பொறுப்பு, தேர்வுத் துறையிடம் வழங்கப்பட்டுள்ளது. ஆய்வுக்கான கேள்வித் தாள்களை, தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில் வழங்கிஉள்ளது. இந்த ஆய்வுக்குப் பின் 10ம் வகுப்பு மாணவர்களின் கல்வித்தரம், கற்பித்தல் முறைகள் போன்றவற்றின் நிலைகளை அறிந்து கொள்ளலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement