Ad Code

Responsive Advertisement

சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளுக்கு தமிழ் பாடபுத்தகம் அச்சடிக்கும் பணி தீவிரம்; மார்ச் மாதம் வினியோகம்

சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., உள்ளிட்ட பிற வாரிய பள்ளி மாணவர்களுக்கான தமிழ் பாடபுத்தகம் அச்சடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும், மார்ச் மாதம் பள்ளிகளுக்கு வினியோகிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்தார்.

மாநில பாடத்திட்டத்தின் கீழ், ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில், கட்டாயம் தமிழ் படிக்கும் சட்டம் அமலில் இருந்து வருகிறது. நடப்பு கல்வி ஆண்டில், ஒன்பதாம் வகுப்பு வரை, தமிழ் பாடம் கட்டாயமாக உள்ளது. அடுத்த கல்வி ஆண்டில், அனைத்து பள்ளி மாணவர்களும், தமிழ் பாடத்தில், பொது தேர்வு எழுதவுள்ளனர்.

இந்நிலையில், கடந்த, 2006 கட்டாயம் தமிழ் படிக்கும் சட்டத்திmf, தமிழக அரசு பாட திட்டத்தை சேராத இதர பள்ளிகளும், அடுத்த ஆண்டு முதல், தமிழ் பாடத்தை கட்டாயம் கற்பிக்க வேண்டும். அடுத்த கல்வி ஆண்டில் (2015 --- 16), முதல் வகுப்பில், தமிழ் பாடம் கற்பிக்க வேண்டும். பின், படிப்படியாக, அடுத்தடுத்த வகுப்புகளுக்கு, தமிழ் பாடம் நீட்டிக்கப்படும். 2024 -- 25ம் ஆண்டில், பத்தாம் வகுப்பு பொது தேர்வில், தமிழ் பாடம் இடம்பெறும். அனைத்து மாவட்டங்களிலும், பிற பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகள், மாணவர்களின் விபரம், ஆசிரியர்களின் விபரம் உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டு தலைமை அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டன. கோவை மாவட்டத்தில், பிற பாடத்திட்டங்களை பின்பற்றும், 91 பள்ளிகளின் விபரங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் கூறுகையில், ''மாவட்ட வாரியாக பிற பாடத்திட்டங்களை பின்பற்றும் பள்ளிகளில் முதல் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை குறித்த, எண்ணிக்கை பெறப்பட்டுள்ளது. முப்பருவ முறையின் கீழ், மாணவர்களுக்கு மூன்று பிரிவாக வழங்கப்பட்டுள்ள பாடபுத்தகங்கள் ஒருங்கிணைத்து ஒரே தொகுப்பாக அச்சிடப்பட்டுள்ளது. தமிழ் பாட புத்தகம் அச்சிடும் பணி, முடியும் தருவாயில் உள்ளது. மார்ச் மாதம் புத்தகங்கள் பள்ளிகளுக்கு வினியோகிக்கப்படும்,'' என்றார்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement