Ad Code

Responsive Advertisement

பிளஸ் 2 தேர்வு: நிகழாண்டு கூடுதலாக 50 மையங்கள்

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்காக இந்த ஆண்டு கூடுதலாக 50-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதையடுத்து, மாநிலம் முழுவதும் தேர்வு மையங்களின் எண்ணிக்கை 2,300 ஆக அதிகரிக்க உள்ளது.

கடந்த ஆண்டு 2,242 மையங்களில் 8.79 லட்சம் பேர் தேர்வு எழுதினர். வரும் மார்ச் 5-ஆம் தேதி தொடங்கும் தேர்வை ஏறத்தாழ 9 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.

புதிய தேர்வு மையங்கள் பெரும்பாலும் அரசுப் பள்ளிகளுக்கே வழங்கப்பட்டுள்ளன. மாணவர்கள் நீண்ட தூரம் பயணிப்பதைக் குறைக்கும் வகையிலும் புதிய தேர்வு மையங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் 600 மாணவர்களுக்கும் அதிகமாக தேர்வு எழுதும் மையங்களில் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக தேர்வு மையங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு தேர்வு மையத்திலும் 400 மாணவர்கள் என்ற அளவில் இருந்தால் தேர்வுப் பணிகளைக் கண்காணிப்பது எளிதாக இருக்கும். வினாத்தாள் கட்டுகள், விடைத்தாள் கட்டுகளை விநியோகிக்கவும், தேர்வறைகளைக் கண்காணிக்கவும் இந்த எண்ணிக்கையில் மாணவர்கள் இருந்தால் எளிதாக இருக்கும் என தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெரும்பாலான பணிகள் நிறைவு: விடைத்தாள் முகப்புப் பக்கங்கள் அச்சிடுவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

வரும் வாரங்களில் விடைத்தாள்கள், வினாத்தாள்கள் அச்சிடும் பணிகளும் தொடங்கும் எனத் தெரிகிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement