Ad Code

Responsive Advertisement

10,000 காலிப் பணியிடங்கள் நிகழாண்டில் நிரப்பப்படும்: டி.என்.பி.எஸ்.சி.

நிகழாண்டில் 10 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.

அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் நிகழாண்டுக்கான தேர்வுக் கால அட்டவணை வெளியிடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தேர்வாணைய வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பணியாளர் தேர்வாணையத்தின் பொறுப்புத் தலைவர் பாலசுப்பிரமணியம் பங்கேற்று தேர்வு அட்டவணையை வெளியிட்டார். பின்னர், செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

கடந்த 2013-14 ஆம் ஆண்டில் 14 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. நிகழாண்டில் மாவட்ட கல்வித் துறை அதிகாரி, சுகாதாரத் துறை அதிகாரி, மாவட்ட நீதிபதி உள்ளிட்ட 10 ஆயிரம் பணியிடங்கள், குரூப் 1, 2, 4 பிரிவுகளில் தேர்வு மூலம் நிரப்பப்படும். இதற்கான தேர்வுக் கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது என்றார்.

முன்னதாக, மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி, இரண்டு நிமிஷங்கள் அமைதி அனுஷ்டிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியம் தலைமையில் அதிகாரிகள்-ஊழியர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி மேற்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தேர்வாணையத்தின் செயலாளர் விஜயகுமார், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி வி.ஷோபனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement