Ad Code

Responsive Advertisement

பொதுத்தேர்வு நெருங்குவதால் ஆசிரியர் பணியிடமாற்றங்கள் நிறுத்தம்: அரசு உத்தரவு

பொதுத்தேர்வு நெருங்குவதால் நடப்பு கல்வியாண்டில் இனி ஆசிரியர்கள் பணியிட மாறுதல்கள் எதனையும் மேற்கொள்ளக்கூடாது என்று பள்ளி கல்வி செயலாளர் சபிதா உத்தரவிட்டுள்ளார். ஆசிரியர்கள் கலந்தாய்வு நடந்து முடிந்த பின்னரும் ஆசிரியர்கள் பணியிட மாறுதல்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இதனால் மாணவ - மாணவியரின் கல்வி பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்தநிலையில் நடப்பு கல்வியாண்டில் ஆசிரியர்கள் பணியிட மாறுதல்களை இனி மேற்கொள்ள வேண்டாம் என்றும், அவற்றை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் பள்ளி கல்வி செயலாளர் சபிதா பள்ளி கல்வி இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான உத்தரவில் அவர் கூறியிருப்பதாவது:

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நடப்பு கல்வியாண்டில் பள்ளி இறுதி தேர்வுகள் நெருங்கி வருவதால் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டிய நிலை உள்ளது. இப்போது ஆசிரியர்கள் பணியிட மாறுதல்களை மேற்கொண்டால் தொடர்ச்சியான கற்பித்தல் பணிகளில் தொய்வு ஏற்படும்.  மாணவர்களின் கற்கும் திறனும் பாதிக்கப்படும். நிர்வாகத்திலும் இது இடர்பாடுகளை ஏற்படுத்தும். எனவே இக்கல்வியாண்டு முடியும்வரை ஆசிரியர்கள் பணியிட மாறுதல்கள் ஏதும் மேற்கொள்ளக்கூடாது என்று அரசாணை பிறப்பிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement