Ad Code

Responsive Advertisement

தொலைதூர கல்வி மையங்கள் படிப்படியாக மூட நடவடிக்கை - யுஜிசி துணைத்தலைவர் தகவல்

திருச்சி பாரதிதாசன் பல்கலை. 31வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவில், 606 பேருக்கு தமிழக கவர்னர் ரோசய்யா பட்டம்  வழங்கினார். இந்த பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 72,720 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. விழாவில், டெல்லி பல்கலைக்கழக நிதி  நல்கைக்குழு (யுஜிசி) துணைத்தலைவர் பேராசிரியர் தேவராஜ் பேசியதாவது:
யுஜிசி வழங்கும் நிதியை எதிர்பார்த்து பல்கலைக்கழகங்கள்  இருக்கக்கூடாது. யுஜிசி நிதியில்லாமலேயே பல்கலைக்கழகங்கள் சுயமாக செயல்பட முடியும். மாணவர்களை திறன் மிக்க மனிதவளமாக உருவாக்கும்  வகையில், யுஜிசி சார்பில், தலா ஸீ5 கோடி மதிப்பீட்டில் 100 ‘குஷால்‘ மையங்கள் நாடு முழுவதும் துவங்கப்பட்டு வருகிறது.

நாட்டில் உள்ள இக்னோ உள்ளிட்ட தொலைதூர கல்வி மையங்கள் மற்றும் கற்றல் மையங்கள் படிப்படியாக குறைக்கப்பட உள்ளது. தொலைதூர  மையங்களுக்கு மாற்றாக ‘மாஸிவ் ஓப்பன் ஆன்லைன் கோர்சஸ்‘ (மூக்ஸ்) திட்டத்தின்கீழ் ஆன்லைன் மூலம் தொலைதூர வகுப்புகள் வழங்கப்படும்.  இவ்வாறு அவர் பேசினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement