Ad Code

Responsive Advertisement

கவுரவ விரிவுரையாளர்களுக்குசம்பளம் வழங்க உத்தரவு

அரசுக்கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஐந்து மாத சம்பள நிலுவை தொகையை வழங்க கல்லுாரிக்கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 72 அரசுக் கலைக் கல்லுாரிகள் உள்ளன. விரிவுரையாளர் பற்றாக்குறையை தவிர்க்க ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். வகுப்புகள் நடக்கும் ஜூன் முதல் ஏப்ரல் வரை இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.இரண்டாவது 'ஷிப்ட்'டில் இவர்கள் வகுப்பு எடுக்கின்றனர்.

புதிதாக துவக்கப்பட்ட கல்லுாரிகளில் முதல்வரை தவிர மற்ற அனைவரும் கவுரவ விரிவுரையாளர்களே. கடந்த ஜூலை மாதத்தில் இருந்து இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை.இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து நிலுவை சம்பள பட்டியலை கருவூலத்துக்கு அனுப்புமாறு கல்லுாரி முதல்வர்களுக்கு கல்லுாரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி பட்டியலை முதல்வர்கள் அனுப்பி உள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement