Ad Code

Responsive Advertisement

தமிழகத்தில் பிளஸ் 2 அரசு பொது தேர்வில் தட்டச்சு பாடம் செய்முறைத் தேர்வு பாடமாக மாற்றம்

 தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தொழிற்கல்வி பாடமான தட்டச்சுப் பாடம் கடந்த 1978–1979 ஆம் கல்வியாண்டு முதல் எழுத்துப் பாடமாக இருந்தது. தற்போது மார்ச் 2015ல் நடைபெற உள்ள அரசு பொதுத் தேர்வில் தட்டச்சு பாடத்தை செய்முறை பாடமாக மாற்றி பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சபீதா உத்தரவிட்டுள்ளார்

மேலும் இந்த பாடமானது தட்டெழுத்தும் கணிப்பொறி இயக்க முறையும் என்ற பெயரில் உள்ளது. எனவே கணிப்பொறி இயக்கம் குறித்து ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்

தமிழக அரசின் மேல்நிலை பொதுத்தேர்வில், கணிதம், அறிவியல், கணினியில் தொழிற்கல்வி என பல்வேறு பாடத்திட்டங்கள் உள்ளன. இதில் தொழிற்கல்வி பாடமான தட்டச்சு பாடம் 1978&79ம் கல்வி ஆண்டு முதல் எழுத்துமுறை பாடமாக இருந்தது. இப்பாடம் அனைத்தும் செய்முறையாக படிப்பதால் தற்போது மார்ச் 2015ம் கல்வியாண்டு முதல் செய்முறை பாடமாக மாற்ற பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி அனைத்து மாவட்டத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுக்கு 2015ம் கல்வியாண்டில் தொழிற்கல்வி பாடம் செய்முறை தேர்வாக மாற்ற இதற்கான ஆணையும் வெளியிட்டுள்ளது. வரும் மார்ச் மாதம் தொழிற்கல்வி பாடம் செய்முறை தேர்வாக மாற்றப்பட்டுள்ளதை, மாணவர்களிடம் தெரிவித்து, அதற்கேற்ப கற்பிக்கவேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement