Ad Code

Responsive Advertisement

10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் டிசம்பர் 24 வரை விண்ணப்பிக்கலாம்: தேர்வுத்துறை

 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள், இன்று முதல், 24ம் தேதி வரை, விண்ணப்பித்துக் கொள்ளலாம் என, அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

கோவை வருவாய் மாவட்டத்தில், ஏழு சிறப்பு சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

நடப்பு கல்வியாண்டில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச், ஏப்ரல் மாதத்தில் பொதுத் தேர்வுகள் நடக்கவுள்ளது. இத்தேர்வுகளுக்கு அரசுத் தேர்வுத்துறையால் மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சேவை மையங்களை நேரடியாக அணுகி, ஆன்-லைன் முறையில், விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

கோவை கல்வி மாவட்டத்தில், அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி (மாணவர்கள்), அரசு துணிவணிக மேல்நிலைப்பள்ளி (மாணவிகள்), சூலுார் அரசு மேல்நிலைப் பள்ளி (இருபாலர்), நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி (இருபாலர்) என, நான்கு சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி (இருபாலர்), நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி (மாணவர்கள்), நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி (மாணவிகள்) ஆகிய மூன்று சிறப்பு சேவை மையங்கள், என, கோவை வருவாய் மாவட்டத்தில், மொத்தம் ஏழு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்வுக் கட்டணம், 125 ரூபாய்; கூடுதலாக ஆன்-லைன் பதிவு கட்டணம் 50 ரூபாய் என, 175 ரூபாயை பணமாக மட்டுமே, செலுத்த வேண்டும். பார்வையற்றோருக்கு கட்டணம் விலக்கு அளிக்கப்படுகிறது. ஆன்-லைனில் விண்ணப்பத்தைப் பதிவு செய்தபின், தனித்தேர்வர்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்கப்படுகிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement