Ad Code

Responsive Advertisement

'அரசு பள்ளி மாணவர்கள்யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை'

''நாம் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை என்பதை, அரசு பள்ளி மாணவர்கள் உணர வேண்டும்,'' என, 'தினமலர்' ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில், எழுத்தாளர் ரமேஷ் பிரபா பேசினார்.'தினமலர்' ஜெயித்துக் காட்டுவோம் மாலை நிகழ்ச்சியில், எழுத்தாளர் ரமேஷ் பிரபா பேசியதாவது:
நீங்கள், பிளஸ்2 படிக்கும் போது, உங்களை தவிர, உங்களை சுற்றி உள்ள அனைவரும், 'நீ இந்த ஆண்டு, பிளஸ் 2 தானே' என, பரபரப்பு ஆவார்கள்.தேர்வு நெருங்கும் போது தான், லேசாக ஒரு பயம் வரும். கஷ்டமான பாடங்களை, எப்படி எளிமையாக படிக்கலாம் என்ற அணுகுமுறையை சொல்லி தருவது தான், 'ஜெயித்துக் காட்டுவோம்' நிகழ்ச்யின் நோக்கம்.அரசு பள்ளியில் படிக்கு நாம், தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டி போட முடியுமா என்ற, தாழ்வு மனப்பான்மை எப்போதும் உண்டு.எத்தனை பெரிய தனியார் பள்ளியாக இருந்தாலும், அரசு அங்கீகாரம் பெற்றது என, இருக்கும்.
அது இருந்தால் தான், அவர்களுக்கே அங்கீகாரம். அப்போது, அரசே நடத்தும் பள்ளியை, எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிட முடியாது.அரசு பள்ளிகளில், பயிலும் மாணவர்களின் சாதனைகள் பேசப்படுவதில்லை. நாம் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல என்பதை உணர வேண்டும்.வணிகவியல் மாணவர்கள் ஆகிய நீங்கள் தான், நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்க போகிறீர்கள். நமக்கு இருக்கும் வாய்ப்பை கண்டுபிடிக்க வேண்டியது, நம் பொறுப்பு.
இவ்வாறு, அவர் பேசினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement