Ad Code

Responsive Advertisement

மருத்துவ மாணவர் சேர்க்கை: தமிழ் பாட மதிப்பெண்ணிற்கு முன்னுரிமை: ஐகோர்ட்டில் வழக்கு

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையின்போது, இரண்டு பேர் ஒரே 'கட்-ஆப்' மதிப்பெண் பெற்றால், தமிழ் பாட மதிப்பெண் அடிப்படையில் முன்னுரிமை அளிக்க தாக்கலான வழக்கில் தனி நீதிபதி விசாரணைக்கு மாற்றி மதுரை ஐகோர்ட் கிளை பெஞ்ச் உத்தரவிட்டது.

பழநி டாக்டர் ராமசாமி தாக்கல் செய்த பொதுநல மனு: எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., மருத்துவப்படிப்பு மாணவர் சேர்க்கையின்போது ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். இரண்டு மாணவர்கள் ஒரே 'கட்-ஆப்' மதிப்பெண் பெற்றால் யாருக்கு முன்னுரிமை வழங்குவது என விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலில் பிளஸ் 2 உயிரியல் பாட மதிப்பெண் அடிப்படையில் முன்னுரிமை வழங்குதல்; இரண்டாவதாக வேதியியல் மற்றும் விருப்பப் பாடங்களில் பெற்ற மதிப்பெண், பிறந்ததேதி, ரேண்டம் எண் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. முதல் நிபந்தனை ஏற்புடையதே. ரேண்டம் எண், பிறந்த தேதி என்பது அதிர்ஷ்டத்தை பொறுத்தது. இது ஏற்புடையதல்ல. ரேண்டம், பிறந்ததேதிக்கு முன்னுரிமை அளிப்பதை தவிர்க்க வேண்டும். பதிலாக பிளஸ் 2 தமிழ் பாடத்தில் கூடுதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இதை 2015-16 மருத்துவ மாணவர் சேர்க்கையில் பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை செயலர், மருத்துவக் கல்வி இயக்கக தேர்வுக்குழு செயலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் வி.தனபாலன், வி.எம்.வேலுமணி கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் டி.வெங்கடேஷ் ஆஜரானார். நீதிபதிகள், 'இதை பொதுநல வழக்காக ஏற்க முடியாது. தனி நீதிபதி விசாரணைக்கு மாற்றப்படுகிறது' என்றனர். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement