Ad Code

Responsive Advertisement

இருவர் ஒரே மார்க் பெற்றால் குலுக்கல் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறை மாற்ற வழக்கு

மருத்துவ மாணவர் சேர்க்கையின்போது இருவர் ஒரே மதிப்பெண் பெற்றால் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பதை மாற்றக்கோரிய மனு தனி நீதிபதி விசாரணைக்கு மாற்றப்பட்டது. திண்டுக்கல் மாவட் டம், பழநியைச் சேர்ந்த ராமசாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ கல்லு£ரிகளில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. 2 பேர் ஒரே மதிப்பெண் பெற்றிருந்தால் யாருக்கு இடமளிப்பது என்பதற்காக ஒரு நடைமுறை பின்பற்றப்படுகிறது. இதன்படி உயிரியல் பாடத்தில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படும். அதிலும் ஒரே மதிப்பெண்ணாக இருந்தால் வேதியியல் மதிப்பெண் கணக்கிடப்படும். இதுவும் ஒரே மாதிரி இருந்தால் விருப்ப பாடத்தின் மூலம் கணக்கிடப்படும். அதிலும் ஒரே மதிப்பெண்ணாக இருந்தால் வயதில் மூத்தவர் யார் என்ற அடிப்படையிலும், அதிலும் ஒரே மாதிரி இருந்தால் குலுக்கல் முறையிலும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

வயது மற்றும் குலுக்கலில் தேர்வு செய்வது என்பது அதிர்ஷ்டம் உள்ளவ ருக்கு ஒதுக்கீடு செய்வதா கும். திறமையாக படித்து அதிக மதிப்பெண் பெற்றவருக்கு அதிர்ஷ்டத்தின் அடிப்படையில் சீட் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. எனவே இப்படியொரு நிலை ஏற்படும்போது தமிழ் பாடத்தில் பெற்ற மதிப்பெண்ணை கணக்கிட்டு மருத்துவ மாணவர் சேர்க்கையில் இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்த நடைமுறையை 2015-16ம் கல்வியாண்டில் இருந்து நடைமுறைபடுத்த வேண்டும் எனவும் மருத்துவ மாணவர் சேர்க்கை தேர்வுக்குழு செயலருக்கு மனு அனுப்பினேன். அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நீதிமன்றம் தலை யிட்டு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை நீதிபதிகள் வி.தனபாலன், வி.எம். வேலுமணி ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர் குறிப்பிட்டதை பொதுநல மனுவாக விசாரிக்க முடியாது. எனவே தனி நீதிபதியின் விசாரணைக்கு மாற்றுவதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement