Ad Code

Responsive Advertisement

அரசுபள்ளிப் ஆசிரியர்கள்,மாணவர்கள் -அன்றும் இன்றும் - கவியாழி கண்ணதாசன்

 கிராமப்புற மற்றும் நகர்புற மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு ஆரம்ப பள்ளிகளின் ஆசிரியர்களே முக்கிய பங்காற்றினார்கள் என்றால் மிகையாகாது.குறைந்த எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இருந்தாலும் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை ஊக்கப் படுத்தும் விதமாக சொந்த பணத்தில் மாணவர்களுடைய கல்விக் கட்டணத்தை செலுத்தியும் ஆசிரியர்களே அருகிலுள்ள கிராமத்திற்கு சென்று மாணவர்களை அழைத்துப் பாடம் சொல்லித்தந்தார்கள்.

பெற்றோர்களையும் சந்தித்து கல்வியறிவின் தேவையையும் படித்தால் பிற்காலத்தில் அறிவு மேம்பாடு ,வாழ்க்கைத்தரம் உயர்வு அரசு வேலை போன்ற அறிவுரைகளைச் சொல்லி மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப வற்புறுத்துவார்கள்.மாணவர்களை படிக்க வைக்க வேண்டி அரசு வழங்கும் மதியஉணவுத் திட்டத்தில் ஏழை மானவர்களைச் சேர்த்து மதிய உணவு தந்து படிக்க வைத்தார்கள்.மாணவர்களின் குறைநிறைகளை பெற்றோர்களுக்குத் தெரியப் படுத்தி மாணவர்களின் கல்விக்குப் பேருதவி செய்தார்கள்

நானும் அரசுப் பள்ளியில்தான் எட்டாம் வகுப்புவரைப் படித்தேன்.நான் ஆரம்பக் கல்வி படிக்கும்போது மாணவர்கள் மேல் அக்கறையுள்ள பல ஆசிரியர்கள் தாங்களாகவே மாணவர்களை அழைத்துவர கிராமத்திற்குள் செல்வார்கள் கையில் தடியுடன் நாலைந்து மாணவர்களை தெருவுக்குத் தெரு தப்பிவிடாமல் (நானும் மாணவர்களைப் பிடிக்க போனது )வீட்டுக்கே சென்று அழைத்து வந்தது இன்றும் நினைவிருக்கிறது.மாணவர்களின் குடுமப்த்திற்கு பொருளாதார உதவி செய்து மானவர்கழ்ப் படிக்கச் வைத்த ஆசிரியர்கள் பலருண்டு.

அன்றைய நாட்களில் பள்ளி செல்ல அதிகமான அரசு பேருந்து வசதி கிடையாது .பள்ளி செல்ல ஆர்வம் உள்ளவர்கள் நடந்தோ மிதிவண்டியிலோ அல்லது மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டி போன்றவற்றில்தான் செல்லவேண்டி இருந்தது .நடந்தே சிலபல மைல்கள் சென்று படித்து வந்தவர்கள் இன்று நல்ல வேலையில் இருக்கிறார்கள்.நகர்ப்புறங்களிலும் தொடர்வண்டி செல்லும் பாதையிலும் மட்டுமே குறைந்த எண்ணிக்கையில் தொடர்வண்டி வசதி இருந்தது.காலையில் புறப்பட்டு இரவில் வீடு திரும்பியதாய் பலபேர் சொல்லியதைக் கேள்விபட்டிருக்கிறேன்.

அன்றைய நாட்களில் மாணவர்கள் ஆறாம் வகுப்புக்கு மேல் படிக்காவிட்டால் அடிக்கச் சொல்லி பெற்றோர்களே ஆசிரியரிடம் சொல்வார்கள்.வீட்டுப்பாடம் எழுதாதவர்கள் சரியாக பாடம் படிக்காதவர்களை வகுப்புக்குள் முட்டிபோட்டு உட்காருவது ,வெய்யிலில் முட்டிப்போட்டு இருப்பது,வெய்யிலில் நாள் முழுக்க நிற்பது அல்லது அதிகபட்சத் தண்டனையாகத் தலையில் ஒருவர் மாறி ஒருவர் குட்டு வைப்பது கைவிரல்களை நீட்டி அடிகோலால் அல்லது பிரம்பால் அடிப்பது மற்றும் அதிகபட்சமாக பெற்றோரை அழைத்துவரச் சொல்வது போன்ற சீர்திருத்தும் தண்டனைகள் இருக்கும்.

இன்றைய நிலையோ எல்லோருமே அறிந்ததுதான் ,அரசுஆரம்பப் பள்ளியில் படிக்க வைக்க ஆர்வமில்லாத பல பெற்றோர்கள் தனியார் பள்ளியில் சேர்த்து விடுவதன் விளைவு இன்று நிறைய ஆசிரியர்கள் இருந்தும் அரசுப்பள்ளியில் படிக்க மாணவர்கள் இல்லாது மூடும் நிலைக்கு வந்துவிட்டது.மேலும் ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்கவோ அதட்டவோ கூடாது என்ற கடுஞ்சட்டத்தால் ஆசிரியர்களும் மாணவர்களை அரசுபள்ளிக்கு கொண்டுவருவதில் சிக்கல் இருக்கிறது.ஆனால் இன்றும் கிராமபுறங்களில் செயல்படும் அரசு ஆரம்பப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தனியார் நடத்தும் பள்ளிகளைவிட நல்ல மதிப்பெண்களை பெற்று சிறந்து விளங்குகிறார்கள்.

(கவியாழி)

 நன்றி - ஆசிரியர்குரல்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement