Ad Code

Responsive Advertisement

புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம்: மேலும் 22 மருத்துவமனைகள் சேர்ப்பு

புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள் சிகிச்சைப் பெறும் மருத்துவமனைகள் பட்டியலில், புதிதாக, 22 மருத்துவமனைகள் சேர்க்கப்பட்டு உள்ளன. இந்த திட்டம், 2012ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, நான்கு ஆண்டுகளுக்கு, நான்கு லட்சம் ரூபாய்க்கு, மருத்துவ சிகிச்சைப் பெறலாம். ஊழியர்கள் மருத்துவ சிகிச்சைப் பெறுவதற்கு வசதியாக, 635 மருத்துவமனைகள், காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்பட்டன.
மேலும், 22 மருத்துவமனைகளை சேர்க்க, திட்டம் அங்கீகாரக்குழு அரசுக்கு பரிந்துரை செய்தது. அதை ஏற்று, ஏற்கனவே உள்ள, 635 மருத்துவமனைகளுடன், புதிதாக, 22 மருத்துவமனைகளை இணைத்துக் கொள்ள, அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. மருத்துவமனை கள் விவரத்துடன் கூடிய அரசாணை, www.tn.gov.in என்ற அரசு இணையதளத்தில், 'கவர்மென்ட் ஆர்டர்ஸ்' என்ற தலைப்பின் கீழ் உள்ளது.





Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement