Ad Code

Responsive Advertisement

ரயில்வே தேர்வு விண்ணப்பங்கள் நிராகரிப்பு: ஊழியர்கள் கண்டனம்

ரயில்வே வாரியத்தின் தேர்வில் தமிழக இளைஞர்களின் 2 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்திய எஸ்.சி., எஸ்.டி. ரயில்வே தொழிற்சங்கம் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சென்னை சென்ட்ரலில் உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ரயில்வே ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்து தொழிற்சங்க பொதுச் செயலாளர் அ. ஞானசேகரன் கூறியது:

ரயில்வே தேர்வு வாரியம் ஆர்.ஆர்.பி., ஆர்.ஆர்.சி. சார்பில் ஊழியர் தேர்வுக்கான விண்ணப்பம் கோரப்பட்டதில், சுமார் 3 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதில் 2 லட்சம் விண்ணப்பங்கள் தமிழக இளைஞர்களுடையவை.

தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு 70 சதவீத வேலைவாய்ப்பு கேட்டு போராடி வரும் நிலையில் இவ்வளவு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது.

எஸ்.சி., எஸ்.டி. தொழிலாளர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். ரயில்வே துறையில் தனியார்மயத்தை அனுமதிக்கக் கூடாது. இதைக் கண்டித்து தொடர்ந்து போராடுவோம் என்றார் ஞானசேகரன்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement