Ad Code

Responsive Advertisement

தொலைதொடர்பு துறையில் வேலைவாய்ப்பு பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

 இந்திய தொலைதொடர்பு துறையில் காலியாக இருக்கும் இடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுதொடர்பாக, தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
இந்திய தொலைதொடர்புத் துறையின் திட்டப் பணிகளுக்கு, எலக்ட்ரானிக், டெலிகாம் பிரிவில் பிஈ, பிடெக் தேர்ச்சி அடைந்த இரண்டு வருட அனுபவமுடைய 35 வயதிற்கு உட்பட்ட பொறியாளர்கள் தேவைப்படுகிறார்கள். இப்பணிக்கு, திட்ட மிடுதல், வடிவமைத்தல், நடைமுறைப்படுத்துதல் மற்றும் ஆட்டோகேட் போன்றவற்றில் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.மேலும், குவைத் நாட்டின் கனரக மற்றும் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்ற 50 வயதிற்கு உட்பட்ட ஓட்டுநர்கள் தேவைப்படுகிறார்கள். 

தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப ஊதியத்துடன், இலவச விமான டிக்கெட், இருப்பிடம், உணவுப்படி, குவைத் நாட்டின் சட்ட திட்டத்திற்கு உட்பட்ட இதர சலுகைகளும் வழங்கப்படும்.மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு விருப்பமும் தகுதியும் உடையவர்கள், சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட், ஒரு புகைப்படம் ஆகியவற்றுடன் அணுகலாம். விருப்பம் உள்ளவர்கள், எண்.42, ஆலந்தூர் சாலை, ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகம், திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை &32 என்ற முகவரியிலுள்ள தமிழக அரசின், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு நேரிலோ அல்லது அதன் மின்னஞ்சல் முகவரிக்கோ விண்ணப்பங்களை அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு 044&2250 2267, 2250 5886 என்ற தொலைபேசி எண்களையும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement