Ad Code

Responsive Advertisement

மழைக்காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பள்ளிகளுக்கு கல்வித்துறை புதிய உத்தரவு

மழைக்காலம் தொடங்கிவிட்டதால் பள்ளி வளாகங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து கல்வித்துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து, மழைக்காலங்களில் மாணவர்கள் பாதுகாப்புடன் பள்ளிக்கு வந்து செல்வதை உறுதி செய்யும் வகையில் அனைத்து அரசு, ஊராட்சி, நகராட்சி தொடக்க நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் உதவி பெறும் பள்ளிகள், மழலையர் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் முக்கிய அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் என தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, மழைக்காலங்களில் பள்ளி வளாகத்தில் தேங்கும் நீரை மின் மோட்டார் மூலம் அகற்ற துரித நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். ஆறு, ஏரி, குளம், குட்டை, வாய்க்கால் போன்ற பகுதிகளில் மழைக்காலத்தில் நீர் நிரம்ப வாய்ப்பு இருப்பதால் அப்பகுதிகளுக்கு அருகே மாணவர்கள் செல்லாதவாறு எச்சரிக்கையுடன் கண்காணிக்க வேண்டும். இதனால் விளையும் அபாயம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.உணவு இடைவேளை, காலை, மாலை இடைவேளை, வீடுகளில் இருந்து பள்ளிக்கு வரும்போதும்.

வீட்டிற்கு திரும்பும்போதும் மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கையுடன் இருக்க உரிய அறிவுரைகளை வழங்கவேண்டும்.மின் சாதனங்களையும், மின் கம்பிகளையும் எச்சரிக்கையுடன் பராமரிப்பதுடன் மாணவர்கள் இவற்றை தொடாதவாறு கண்காணிக்க வேண்டும். பழைய கட்டிடங்கள் மழைநீரால் பாதிப்புக்குள்ளாகி இடிந்து விழும் நிலையில் இருந்தால் முன் எச்சரிக்கையாக அக்கட்டிடங்களுக்குள் மாணவர்களை அனுமதிக்க கூடாது. மேல்நிலை நீர்தேக்க தொட்டி, கழிவறை கழிவுநீர் தொட்டி ஆகியவற்றின் அருகே செல்லாமல் தடுக்க வேண்டும், தொற்றுநோய் ஏற்பட வாய்ப்பிருப்பதால் மாணவர்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தி காய்ச்சி வடிகட்டிய குடிநீரை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும்.மழையில் நனையாமலும், இடி, மின்னல் போன்ற தாக்குதலுக்கு உட்படாமலும் பாதுகாப்பாக இருக்கவும் மரங்களுக்கு கீழ் ஒதுங்குவதால் ஏற்படும் அபாயம் குறித்தும் விளக்கி கூற வேண்டும்.மழை நீடிக்க வாய்ப்பு இருப்பதால், சூழலுக்கு ஏற்ப தொடக்க கல்வி மற்றும் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் விடுமுறை நாட்களிலும் அலுவலகங்களில் முகாமிட்டு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement