Ad Code

Responsive Advertisement

கணக்கு வைத்துள்ள வங்கியாக இருந்தாலும் 5 முறைக்கு மேல் ஏ.டி.எம்., பயன்படுத்தினால் கட்டணம் - நாளை முதல் அமல்

ஏ.டி.எம்., ஐ மாதத்திற்கு 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால் கட்டணம் வசூலிக்கப்படும் திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. சென்னை, பெங்களூரு உள்ளிட்ட 6 நகரங்களில் நாளை முதல் இது அமல்படுத்தப்படுகிறது.கணக்கு வைத்துள்ள வங்கியாக இருந்தாலும் 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால், ஒவ்வொரு முறையும் ரூ.20 கட்டணம் செலுத்த வேண்டும்.
வங்கிக்கணக்கில் பணம் எவ்வளவு உள்ளது என்பதை அறிந்து கொள்ளவும் இது உதவும், பிற வங்கி ஏ.டி.எம்.,களில் 3 முறை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஏ.டி.எம். கார்டை 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால் ரூ.20 கட்டணம் வசூலிக்கும் முறை நாளை (1ஆம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது.

வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர், தங்களது கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்கும், பணம் இருப்பை அறிவிதற்கும் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி வருகின்றனர். கணக்கு வைத்துள்ள வங்கிகளில் இந்த ஏ.டி.எம். கார்டை எத்தனை முறை பயன்படுத்தினாலும் கட்டணம் ஏதும் இதுவரை வசூலிக்கப்படாமல் இருந்தது. மற்ற வங்கி ஏ.டி.எம்.களில் 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால், கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இனிமேல் கணக்கு வைத்துள்ள வங்கி ஏ.டி.எம்.களிலும் 5 முறை மட்டுமே ஏ.டி.எம்.கார்டை இலவசமாக பயன்படுத்த முடியும். அதற்கு மேல் பயன்படுத்தினால் ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும். அதேபோல் மற்ற வங்கி ஏ.டி.எம்.களில் 3 முறை மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும்.

இந்த விதிமுறை பணம் எடுப்பதற்கு மட்டுமின்றி, பணம் இருப்பு குறித்து அறிவதற்கும் பொருந்தும். 5 முறைக்கு மேல் ஏ.டி.எம்.கார்டை பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும்.


இந்த விதிமுறை சென்னை, பெங்களூரு உள்ளிட்ட 6 பெருநகரங்களில் நாளை (டிச.1ஆம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement