Ad Code

Responsive Advertisement

TET: மதிப்பெண் தளர்வு படி பணிநியமனம் செய்யப்பட்டவர்களை பணி நீக்கம் செய்ய கூடாது: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களுக்கு 5 சதவீத வெயிட்டேஜ் மதிப்பெண்   தளர்வு வழங்கி தமிழக அரசு உத்தவிட்டது. மாற்றுத்திறனாளி மற்றும் இடஓதுக்கீட்டு பிரிவிலும் இந்த 5 சதவீத வெயிட்டேஜ் மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டது.
           இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழக அரசு பிறப்பித்த 5 சதவீத வெயிட்டேஜ் மதிப்பெண் தளர்வு அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் பல்வேறு தரப்பின் கோரிக்கையால் மதிப்பெண் தளர்வு என்பதை ஏற்க முடியாது. ஆசிரியர் தகுதி தேர்வுக்கு பின் மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டது சரியல்லல. தகுதி தேர்வை போட்டி தேர்வு போல் நடத்துவதை ஏற்க இயலாது, மதிப்பெண் தளர்வு படி பணிநியமனம் செய்யப்பட்டவர்களை பணி நீக்கம் செய்ய கூடாது என்றும், நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement