Ad Code

Responsive Advertisement

வருங்கால வைப்பு நிதி (PF) சந்தாதாரர்கள் வங்கிக் கணக்கு அளிப்பது கட்டாயம்

வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் நிரந்தரப் பொதுக் கணக்கு எண்ணைப் பெற வங்கிக் கணக்கு எண் அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மண்டலத் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் நிலிண்டு மிஸ்ரா வெளியிட்டுள்ள செய்தி:

வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்) சந்தாரர்கள் நிரந்தரப் பொதுக் கணக்கு எண்ணைப் பெற வங்கி கணக்கு எண்ணை, "ஐஎஃப்எஸ்சி' குறியீட்டுடன் அளிக்க வேண்டும்.

தற்போதைய சந்தாதாரர்களின் வங்கிக் கணக்கு எண் குறித்த விவரங்களை அக்டோபர் 15-ஆம் தேதிக்கு முன்பும், முந்தைய சந்தாதாரர்களின் விவரங்களை அக்டோபர் 31-ஆம் தேதிக்கு முன்னரும் தொழில் நிறுவனங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

இதுவரை வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் 1.80 கோடி பேரிடம் வங்கிக் கணக்கு எண்களும், நிரந்தரக் கணக்கு எண் (பான் கார்டு) குறித்த விவரங்கள் 86.9 லட்சம் பேரிடமும், ஆதார் அடையாள அட்டை எண் குறித்த விவரங்கள் 28 லட்சம் பேரிடமும் இருந்து பெறப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement