Ad Code

Responsive Advertisement

FLASH NEWS : செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது மங்கள்யான்




செவ்வாய் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது மங்கள்யான் விண்கலம். இதன் மூலம் , முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்துக்கு வெற்றிகரமாக விண்கலம் அனுப்பிய நாடு இந்தியா என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் ஆய்வு நடத்துவதற்காக இந்தியா அனுப்பி உள்ள மங்கயான் விண்கலம், செவ்வாய் சுற்றுவட்டப்பாதையில் தனது பயணத்தை வெற்றிகரமாக துவங்கி உள்ளது. செவ்வாயில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ள மங்கள்யான் விண்கலம், 2 நாட்களுக்கு முன் செவ்வாய் கிரக சுற்றுப்பாதையை அடைந்தது. இந்தியாவின் வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை பிரதமர் நரேந்திர மோடியும், கர்நாடக முதல்வரும் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நேரில் பார்வையிட்டனர்.

விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பாராட்டு 

செவ்வாய் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது மங்கள்யான் விண்கலம். இதன் மூலம் , முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்துக்கு வெற்றிகரமாக விண்கலம் அனுப்பிய நாடு இந்தியா என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. முதல் முயற்சியிலேயே மங்கயான் விண்கலத்தை செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தி வரலாற்று சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement