Ad Code

Responsive Advertisement

மத்திய, மாநில அரசுப் பணித் தேர்வுகள்: மாநகராட்சி சார்பில் இலவசப் பயிற்சி

மத்திய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி), தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) ஆகிய போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சியை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி ஞாயிற்றுக்கிழமை (செப்.28) தொடங்கிவைக்கவுள்ளார்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி. ஆகிய போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற விரும்பும் இளைஞர்களுக்கு இலவசமாகப் பயிற்சி வகுப்புகளை சென்னை மாநகராட்சி நடத்துகிறது.

இந்தப் பயிற்சிகள் சைதாப்பேட்டை, பந்தர் கார்டன் ஆகிய மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான பயிற்சி வகுப்புகளை செனாய் நகர் மாநகராட்சி கலையரங்கத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைக்கிறார்.

ஏற்கெனவே விண்ணப்பம் அனுப்பியவர்கள் தவிர இதுவரை விண்ணப்பம் அனுப்பாதவர்களும் பயிற்சியில் நேரடியாகச் சேரலாம்.

Post a Comment

1 Comments

  1. வகுப்பு எத்தனை நாட்கள் நடைபெறுகிறது.

    ReplyDelete

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Ad Code

Responsive Advertisement