Ad Code

Responsive Advertisement

ஜப்பான் முகாமில் பங்கேற்க ராமநாதபுரம் மாணவி தேர்வு

ஜப்பானில் 'ஜூனியர் ரெட் கிராஸ்' சார்பில் நடக்கவுள்ள சர்வதேச இளைஞர் கலாசார பரிவர்த்தனை முகாமில் பங்கேற்க இந்திய அளவில் ராமநாதபுரம் பள்ளி மாணவி தேர்வாகியுள்ளார்.

ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் ஒன் மாணவி ஜேன்மதுரம், 16. இவர், கடந்த 6 ஆண்டுகளாக 'ஜூனியர் ரெட் கிராஸ்' அமைப்பில் உள்ளார். பல்வேறு சேவை பணிகளுக்காக மாவட்ட, மாநில அளவில் பல்வேறு ஊர்களுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், அக்., 22 முதல் நவ., 5 வரை ஜப்பானில் சர்வதேச இளைஞர் கலாசார பரிவர்த்தனை முகாம் (இன்டர்நேஷனல் யூத் எக்சேஞ்ச் புரோகிராம்) நடக்கிறது.இம்முகாமில் 21 நாடுகளை சேர்ந்த 'ஜூனியர் ரெட் கிராஸ்' அமைப்பினர் பங்கேற்கவுள்ளனர். இதில் இந்திய அளவில் ஜேன்மதுரம் ஒரிசாவை சேர்ந்த மாணவர் சார்த்தக் மிஸ்ரா ஆகியோர் ஜப்பான் செல்ல தேர்வாகியுள்ளார். நேற்று, ராமநாதபுரம் கலெக்டர் நந்தகுமாரை சந்தித்து ஜேன்மதுரம் வாழ்த்து பெற்றார்.மாணவி ஜேன்மதுரம் கூறுகையில், "ஜப்பானில் 15 நாட்கள் நடைபெறும் முகாமில் ஒவ்வொரு நாட்டிலும் 'ஜூனியர் ரெட் கிராஸ்' அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது. பேரிடர் மேலாண்மை பயிற்சி கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடக்கிறது. இந்தியா சார்பில் பங்கேற்பதை பெருமையாக கருதுகிறேன்” என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement