Ad Code

Responsive Advertisement

100 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்வு

2014-15 ஆம் கல்வியாண்டில் 100 அரசு உயர்நிலைப் பள்ளிகளை, மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தி பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 11 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. அதற்கு அடுத்து திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களில் 8 உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

மாவட்ட வாரியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை விவரம்:

அரியலூர் -3, கோவை-2, கடலூர்-2, தருமபுரி -3, திண்டுக்கல்-2, ஈரோடு-2, காஞ்சிபுரம் - 6, கன்னியாகுமரி-1, கரூர்-2, கிருஷ்ணகிரி -4, மதுரை -3, நாகப்பட்டினம்-2, நாமக்கல்-2, பெரம்பலூர்-2, புதுக்கோட்டை -5, ராமநாதபுரம்-3, சேலம்-4, சிவகங்கை-3, தஞ்சாவூர்-2, தேனி-2, திருவண்ணாமலை-6, திருநெல்வேலி-2, திருப்பூர்-1, திருவள்ளூர்-8, திருவாரூ-1, திருச்சி-2, தூத்துக்குடி-2, வேலூர்-11, விழுப்புரம்- 8, விருதுநகர் -4.

வரவேற்பு: உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தும் அறிவிப்பை தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் சங்கம் வரவேற்றுள்ளது.

அதேநேரத்தில், ஏற்கெனவே அறிவித்தவாறு 50 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தும் அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும் என்று அந்தச் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சாமி.சத்தியமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement