Ad Code

Responsive Advertisement

மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தும் விதமாக வீடியோ பாடப் புத்தகங்கள் ! - அக்டோபர் மாதம் அரசுப் பள்ளி களுக்கு வழங்க நடவடிக்கை

அரசுப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தும் விதமாக பாடப் புத்தகங்கள் வீடியோவாக தயாரிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதம் அரசுப் பள்ளி களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அளவில் வேலூர் மாவட்டம் கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளது. குறிப்பாக அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கற்றல் மற்றும் வாசிப்புத் திறன் மிகவும் குறை வாக இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் மாணவர் களுக்கு வீடியோ வடிவில் பாடங்களை புரியவைக்க திட்ட மிடப்பட்டுள்ளது.

இதற்காக, வேலூர் மாவட்ட அரசு ஆசிரியர் பயிற்சி மையம் சார்பில் அரசுப் பள்ளி ஆசிரி யர்களைக் கொண்டு வீடியோ பாடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் முதல் முயற்சியாக தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்துப் பாடங்களும் வீடியோ வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு ஆசிரியர் பயிற்சி மைய முதல்வர் பஷீர் அகமது செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறும்போது, ''ஆசிரியர்கள் நடத்தும் பாடங்கள் மாணவர்களுக்கு புரிகிறதா என்பதில் பல சந்தேகங் கள் எழுகிறது. இதற்காக வீடியோவில் பாடங்களை தயாரித்துக் கொடுத்தால் எளிதாக மாணவர்களுக்கு புரியும். காவேரிப்பாக்கம் ஒன்றி யத்தைச் சேர்ந்த தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் 25 பேர் உதவியுடன் தமிழ், ஆங்கிலம், அறிவியல், சமூக அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடங்களை வீடியோவாக தயாரித்துள்ளோம்.

உதாரணமாக அறிவியல் பாடத்தில் காளான்கள் என்ற தலைப்பில் பாடம் நடத்தும்போது, அது எவ்வாறு வளர்கிறது என்பதை வீடியோ பதிவாக மாணவர்களுக்கு காண்பிக்கப்படும். பின்னணியில் பாடங்கள் வசனமாக ஒலிக்கும். சமூக அறிவியல் பாடத்தில் மொகலாயர்கள் ஆட்சி குறித்தும் அவர்களது சாதனைகள் குறித்தும் வண்ணப் படங்கள் இடம் பெறும்.

6 முதல் 8-ம் வகுப்பு வரை அனைத்து அரசுப் பள்ளிகளிலும் லேப்டாப், புரெஜெக்டர் வழங்கப் பட்டுள்ளது. புரெஜெக்டர் உதவி யுடன் இனி மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படும். அதேபோல, அடுத்த முயற்சியாக 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்களை வீடியோவாக தயாரிக்க முடிவு செய்துள்ளோம். தற்போது தயாரித்துள்ள வீடியோ பாடங்கள் அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குநரிடம் அளிக்கப்படும். ஒப்புதல் கிடைத் ததும் வரும் அக்டோபர் மாதம் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் விநியோகம் செய்யப்படும்'' என்றார்.

அப்போது வேலூர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா உடனிருந்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement