Ad Code

Responsive Advertisement

நல்ல பள்ளிக்கு என்ன தேவை? மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் கருத்தறியும் நிகழ்ச்சி

நல்ல பள்ளிக்கு என்ன தேவை என்பது தொடர்பாக மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோரின் கருத்துக்களை அறியும் நிகழ்ச்சி சென்னை மீனம்பாக்கம் அரிமா சங்கம் சார்பில் சனிக்கிழமை நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சி தொடர்பாக சென்னை மீனம்பாக்கம் அரிமா சங்கத்தின் தலைவர் அனில் கிச்சா கூறியது: மீனம்பாக்கம் அரிமா சங்கத்தின் 50-ஆவது ஆண்டு விழாவையொட்டி, சென்னையில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களின் கருத்துக்களின் வாயிலாக நல்ல பள்ளி எது என்பதை அறிந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.   கீழ்ப்பாக்கத்தில் உள்ள ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளியில் சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் 5 ஆசிரியர் குழுவினர், 5 மாணவர் குழுவினர் பங்குபெற்று நல்ல பள்ளி தொடர்பான தங்களது கருத்துகளைத் தெரிவிக்க உள்ளனர்.

அதோடு, பெற்றோர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆகியோரும் நல்ல பள்ளிக்கு என்ன தேவை என்பது தொடர்பாக தங்களது கருத்துக்களை கட்டுரை வடிவில் இ-மெயில் மூலம் தெரிவிக்கலாம்.

இதில் சிறந்த 100 கட்டுரைகள் "நல்ல பள்ளிக்கு என்ன தேவை' என்ற புத்தகமாக தொகுக்கப்படும். சிறந்த 10 கட்டுரைகளுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.

பொதுமக்கள் தங்களது கட்டுரைகளை அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி: gurudevobhava2014@gmail.com.

மேலும் தகவலுக்கு 93810-29179 என்ற செல்பேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement