Ads

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, August 31, 2014

ஆசிரியர் தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் பள்ளி மாணவர்களுடன் உரையாற்ற ஏற்பாடு!


ஆசிரியர் தினத்தின் பெயரை இனிமேல் சமஸ்கிருத மொழியில் குருஉத்சவ்-2014 என்று அழைக்கப்பட வேண்டுமென மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த நாளில் சி.பி.எஸ்.சி பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பிரதமர் நரேந்திர மோடியின் உரையை கேட்க வேண்டுமென நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.சி பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

எம்.எட். நுழைவு தேர்வு: வினாத்தாள் குறைவாக வந்ததால் பட்டதாரி ஆசிரியர்– மாணவர்கள் போராட்டம்..

திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான எம்.எட். நுழைவு தேர்வு வேலூர் தனியார் கல்லூரியில் இன்று நடந்தது. சுமார் 863 பட்டதாரிகள் இன்று தேர்வு எழுத வந்தனர்.

கலந்தய்வுக்கு செல்வோர் கவனிக்க...

கலந்தாய்வுக்கு செல்லும் ஆசிரியர்கள் ஒருமணி நேரம் முன்னதாகவே செல்ல கேட்டுக்கொள்கிறோம். கலந்தாய்வு மையங்களில் மாவட்டத்திற்கு உட்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ள பள்ளிகளின் பட்டியல் ஓட்டபட்டிருக்கும்... குறைதபட்சம் 5 இடங்களையாவது வரிசைவாரியாக தேர்வு செய்து அப்பள்ளிகளை குறித்து, பதவி நிலை குறித்து, பள்ளிக்கான போக்குவரத்து வசதிகள் குறித்து நன்கு அறிந்துக்கொண்டு கலந்தாய்வு மையத்திற்குள் செல்லுங்கள்.... கலந்தாய்வு மையத்திற்குள் உங்களை தவிர யாரையும் அனுமதிக்க மாட்டார்கள் என்பதை அனைவரும் அறியவேண்டியது மிக அவசியம்.

TNTET PAPER 1 COUNSELLING : தொடக்கக் கல்வி - காலிப்பணியிடங்கள் பட்டியல் நாளை காலை 8மணிக்கு அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது, காலை 8.30மணிக்கு அனைத்து கலந்தாய்வு மையங்களில் காலிப்பணியிட பட்டியல் ஒட்ட உத்தரவு

எழுத்து அறிவித்தவன் - பணி நியமனம் பெறும் ஆசிரியர்களுக்கு ஓர் வேண்டுகோள்

உயர்நீதிமன்றத்தால் பரிதுரைக்க்கப்பட்டு அரசால் அமுல்படுத்தப்பட்ட G.O 71 TET Weightage ரத்து செய்யக்கோரி 01.09.2014 அன்று சென்னையில் பேரணி

உயர்நீதிமன்றத்தால் பரிதுரைக்க்கப்பட்டு அரசால்  அமுல்படுத்தப்பட்ட G.O 71 TET Weightage ரத்து செய்யக்கோரி 01.09.2014 அன்று சென்னையில் பேரணி நடைபெற இருக்கிறது. பேரணி நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரும் கடிதம்.

செப்டம்பர் 01 திங்கள்கிழமை பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் சார்பில் நடைபெறும் பேரணியானது சென்னை எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்திலிருந்து லாங்ஸ் கார்டன் வரை செல்லும் பேரணியை அமைதியாக நடத்துவது குறித்து சென்னை எக்மோர் காவல்துறையினர் பேரணிக்குழுவிற்கு கொடுத்த வழிகாட்டும் நெறிமுறைப்படிவம் மற்றும் பேரணிக்குழுவினர் அளித்த ஒப்புதலும்..




வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் அதிகளவில்காலியாக உள்ளது

வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் அதிகளவில் காலியாக உள்ளது ஞாயிற்றுக்கிழமை வெளிமாவட்டங்களில் பணிபுரிய விருப்பம் கேட்டு கலந்தாய்வு நடைபெறும்.

PG கடலூர் : 50 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனஆணை(மாவட்டத்திற்குள்)

கடலூரில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 50 பேருக்கு பணி நியமன 
ஆணை வழங்கப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு,பணி நியமன கலந்தாய்வு கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நேற்று, நடந்தது.

PG திருநெல்வேலி : 6 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனஆணை(மாவட்டத்திற்குள்)

திருநெல்வேலியில் நடைபெற்ற முதுநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் (மாவட்டத்துக்குள்) 70 பேர் பங்கேற்றனர். அவர்களில் 6 பேருக்கு நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. மீதமுள்ளவர்கள் வெளிமாவட்ட கலந்தாய்வில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டனர்.

PG தஞ்சாவூர் : 34 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனஆணை(மாவட்டத்திற்குள்)

தஞ்சாவூர் மேம்பாலம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள 
அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு சனிக்கிழமை தொடங்கியது. மாநிலம் முழுவதும் தொடங்கப்பட்டதுபோல, இங்கும் தொடங்கப்பட்டகலந்தாய்வில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமனகலந்தாய்வு நடைபெற்றது.

PG திருவாரூர் : 20 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனஆணை(மாவட்டத்திற்குள்)

திருவாரூர் மாவட்டத்தில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்ற தேர்வு பெற்றவர்களுக்கு சனிக்கிழமை பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. திருவாரூர் கஸ்தூரிபா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமனகலந்தாய்வு நடைபெற்றது. 

PG பெரம்பலூர் : 13 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனஆணை(மாவட்டத்திற்குள்)

முதுகலை ஆசிரியர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் 13 ஆசிரியர்களுக்கு சனிக்கிழமை பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. 

PG மதுரை : 2 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனஆணை(மாவட்டத்திற்குள்)

ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வின் முதல் நாளில், மதுரை மாவட்டத்தில் 
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் இருவருக்கு, பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. மதுரையில்இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், முதன்மைக் கல்வி அலுவலர்ஆஞ்சலோ இருதயசாமி தலைமையில் இந்தக் கலந்தாய்வு நடைபெற்றது. 

PG விருதுநகர் : 3 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனஆணை(மாவட்டத்திற்குள்)

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு முகாமில் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து 98 பேர் கலந்து கொண்டனர். 

PG திண்டுக்கல் : 7 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனஆணை(மாவட்டத்திற்குள்)

முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான 
கலந்தாய்வு சனிக்கிழமை தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, பேகம்பூர் புனித லூர்து அன்னை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. 

PG ஈரோடு : 40 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனஆணை(மாவட்டத்திற்குள்)

ஈரோடு மாவட்டத்தில் 40 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன் சனிக்கிழமை வழங்கினார். 

PG நாமக்கல் : 7 பேருக்கு பணி நியமன ஆணை(மாவட்டத்திற்குள்)

நாமக்கல்லில் நடைபெற்ற முதுநிலை ஆசிரியர்களுக்கான நியமன கலந்தாய்வில் 7 ஆசிரியர்களுக்கு முதல் நாளில் பணி நியமனஆணை சனிக்கிழமை வழங்கப்பட்டது.

PG திருவண்ணாமலை : 100 பேருக்கு பணி நியமன ஆணை(மாவட்டத்திற்குள்)

திருவண்ணாமலையில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் நேர்முகத் தேர்வில் 97  பேருக்கு பணி நியமன ஆணைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டது. இதற்கான  ஆணைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொ.பொன்னையா வழங்கினார்.

PGTRB - வேலூர் : 100 பேருக்கு பணி நியமன ஆணை(மாவட்டத்திற்குள்)

வேலூரில் நடைபெற்ற ஆசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வில் 100ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவு சனிக்கிழமை வழங்கப்பட்டது. 
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 14 ஆயிரத்து 700பேருக்கான ஆசிரியர் பணி நியமனத்துக்கான கவுன்சிலிங்சனிக்கிழமை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது. 

PGTRB - விழுப்புரம் :108 பேருக்கு பணி நியமன ஆணை.(மாவட்டத்திற்குள்)

விழுப்புரம் :108 பேருக்கு பணி நியமன ஆணை.
விழுப்புரம் மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டமுதுநிலை ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும்நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. 

1675 புதிய நியமனம் செய்யப்படவுள்ள இடைநிலை ஆசிரியர்கள் 08.09.2014 அன்று பணியில் சேர இயக்குனர் உத்தரவு

ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்று 1675 ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அவர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு செப்டம்பர் 1 முதல் 2ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அக்கலந்தாய்விற்கான கால அட்டவணை கீழ்காணும் விவரப்படி நடக்கவுள்ளது.

சொந்தமாக டாட்டா சுமோ, ஆட்டோ, பள்ளிக் குழந்தைகளுக்கு தினம் சத்தான பொரியல் .... இது அரசு தொடக்கப் பள்ளியில்

பதவி உயர்வு,  ஆசிரியர் அலுவலர்களின் வாழ்வில் முக்கிய தருணங்கள். இந்தப் பதவி உயர்வுகளை நிராகரிக்கும் பலரும் பல நேரங்களில் குடும்ப சூழல்கள் காரணமாகவே நிராகரிக்கின்றனர். அத்தி பூத்தாற்போல் சிலர் மட்டுமே சமூகத்தின் மீதான தங்களின் கடப்பாடு காரணமாக இதை நிராகரிக்கிறார்கள். அப்படியான சில அரிய வகை மனிதர்களில் வில்சன் ராஜும், ஹெலன் மேரியும் அடங்குவர்.

2014 - செப்டம்பர் மாத நாட்காட்டி

இடைநிலை ஆசிரியர்களுக்கு புகைப்படத்துடன் கூடியபணி நியமன ஆணை 04.09.14 முதல் 06.09.2014ம் தேதி வரை அன்று வழங்கப்படும்


12 உதவி இயக்குநர்களுக்கு பணி நியமன ஆணை: முதல்வர் வழங்கினார்

மாவட்ட முன்னாள் படை வீரர் அலுவலகங்களில் காலியாக உள்ள 12 உதவி இயக்குநர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணையை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் கலந்தாய்வு: சென்னையில் 4 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை

தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் கலந்தாய்வு நேற்று தொடங்கியது. சென்னை மாவட்டத்தில் காலியாக இருந்த 4 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு நேற்று பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

14 ஆயிரம் புதிய ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு: முதல் நாளில் 906 பேருக்கு பணி நியமன ஆணை

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட 14 ஆயிரத்து 700 ஆசிரியர்களுக்கான பணி நியமனக் கலந்தாய்வு சனிக்கிழமை தொடங்கியது. மாநிலம் முழுவதும் நடைபெற்ற இந்தக் கலந்தாய்வின் முதல் நாளில், 906 பேருக்கு பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை ஆயிரத்து 400 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளன.

TNPSC - வன பயிற்சிக்கான நேர்முகத்தேர்வு பட்டியல் : ரத்து செய்தது செல்லாது என ஐகோர்ட் உத்தரவு

'வனத்துறை பயிற்சிக்காக, நேர்முகத் தேர்வுக்கு தேர் வானவர்களின் பட்டியலை ரத்து செய்தது செல்லாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

'ஒன்பது மாவட்டங்களில் இடைநிலை ஆசிரியர் காலியிடம் இல்லை'

'சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட, ஒன்பது மாவட்டங்களில், இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடம் இல்லாததால், செப்., 1ம் தேதி நடக்கும் கலந்தாய்வில், குறிப்பிட்ட, ஒன்பது மாவட்டங்களுக்கு, புதிய ஆசிரியர் செல்ல வேண்டாம்' என, தொடக்க கல்வி இயக்குனர்,இளங்கோவன் அறிவித்துள்ளார்.

ஐ.ஏ.எஸ்., கனவை நனவாக்கும் அரசு மையங்கள்!

ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கான பயிற்சி மையங்கள், மூலைக்கு மூலை கணக்கின்றி முளைத்து கிடக்கின்றன. பயிற்சி பெறுவோருக்கு அதிக கட்டணம், பயிற்றுனர்களுக்கும் அதிக சம்பளம், எனும் போது. 'ஏழைகளால், அதுவும் பெண்களால் என்ன செய்ய முடியும்?'

95 லட்சம் பேர் அரசு வேலைக்கு காத்திருப்பு

தமிழகத்தில், கல்வி பயில்வோர் அரசு வேலைக்காக, அரசு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வருகின்றனர். ஆறு மாதத்திற்கு ஒரு முறை வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு குறித்த விவரங்களை, வேலை வாய்ப்பு இயக்குனரகம் வெளியிட்டு வருகிறது.

மாணவர்கள் பாதுகாப்பு : சிறப்பு குழு அமைக்கிறது யு.ஜி.சி.,

உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள், கல்வி சுற்றுலா, கள ஆய்வு உள்ளிட்டவற்றிற்கு செல்லும்போது ஏற்படும் பாதுகாப்பு பிரச்னைகளுக்கு தீர்வு காண, சிறப்பு குழுவை, பல்கலை மானியக் குழு (யு.ஜி.சி.,) அமைக்கிறது நாடு முழுவதும் மத்திய, மாநில பல்கலைகள், நிகர்நிலை பல்கலைகள், அரசு, சுயநிதி கல்லூரிகள் என, 30 ஆயிரம் உயர்கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

'குரு உத்சவ்' என மாறுகிறது ஆசிரியர் தினம்

ஆண்டுதோறும் செப்டம்பர் 5ம் தேதி கொண்டாடப்படும், ஆசிரியர் தினம் இனிமேல், 'குரு உத்சவ்' என்ற பெயரில் கொண்டாட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

நல்லாசிரியரின் நற்பண்புகள் யாவை?

 வரவிருக்கும் டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாளைப் (செப்டம்பர் 5, ஆசிரியர் தினம்) பெருமைப்படுத்தும் விதத்தில் இக்கட்டுரை அமைகிறது.

ஆசிரியர் தின வரலாறு

 ஒரு நல்ல ஆசிரியராக தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, மாபெரும் தத்துவமேதையாக விளங்கிய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் நாளை ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் திருநாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து, ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். அப்படிபட்ட ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், செப்டம்பர் 05 நாளை ‘ஆசிரியர் தினமாக’ கொண்டாடுகிறோம்.

தொடக்கக் கல்வி - 1675 இடைநிலை ஆசிரியர் தேர்வு பட்டியல் மாவட்ட வாரியாக சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது

தொடக்கக் கல்வி - சென்னை, திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் காலிப்பணியிடங்கள் இல்லாததால் இந்த மாவட்டங்களை சார்ந்த பணிநாடுநர்கள் 02.09.2014 அன்றைய கலந்தாய்வில் கொள்ள உத்தரவு

DEE :TNTET PAPER 1 SGT APPOINTMENT News

தொடக்கக் கல்வி - இடை நிலை ஆசிரியர்களுக்கான பணி ஒதுக்கீட்டு ஆணை அன்றே வழங்கப்படும், நியமன ஆணை 4ம் தேதிமுதல் 6ம் தேதி வரை சம்பந்தப்பட்ட மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரிடம் 
பெற்றுக்கொள்ள இயக்குனர் உத்தரவு.

Saturday, August 30, 2014

மது போதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் பணியிடை நீக்கம்

மதுபோதையில் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், இடைநிலை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அடுத்துள்ள கூவனூத்துபுதூர் நடுநிலைப் பள்ளியில், இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் பிரகாஷ். இவர் மதுபோதையில் பள்ளிக்கு வருவதாக புகார் எழுந்தது.

மாணவர்களை அடிக்கவோ, திட்டவோ கூடாது: ஆசிரியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்!

மாணவர்களை ஆசிரியர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் திட்டவோடு, அடிக்கக்கூடாது என்று மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் சுற்றறிக்கை விடுத்துள்ளது.

7-வது முறையாக போட்டியின்றி அதிமுக பொதுச் செயலாளரானார் முதல்வர்


முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுக்கும் ஆசிரியர் பணியில் ஒதுக்கீடு வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு

 முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகளுக்கும் இடஒதுக்கீட்டில் ஆசிரியர் பணி கோரிய மனு குறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

'குறை தீர்ப்பு கூட்டத்தில் அதிகாரிகள் பதில் அளிப்பதில்லை' : தொடக்க கல்வி ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

'தொடக்க கல்வித் துறையில், ஆசிரியர் குறை தீர்ப்பு கூட்டம், வெறும் சடங்காக நடக்கிறது. மனுக்களை வாங்கும் அதிகாரிகள், பதில் அளிப்பது இல்லை' என, தொடக்க கல்வி ஆசிரியர்கள், குற்றம் சாட்டுகின்றனர்.

ஒரு வாரத்துக்குள் பணியில் சேர வேண்டும்

புதிதாக நியமிக்கப்படும் 14,700 ஆசிரியர்களும் ஒரு வாரத்துக்குள் பணியில் சேர வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் திரு. இராமேஸ்வர முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.  

புதிய ஆசிரியர் பணி நியமனம் : சென்னையில் காலிப்பணியிடம் இல்லை - மூன்று மாவட்டத்தவர் ஏமாற்றம்

சென்னை மற்றும் புறநகர்களில் ஆசிரியர் காலி பணியிடங்கள் இல்லாததால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த புதிய ஆசிரியர்கள், ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கலந்தய்வுக்கு செல்வோர் கவனிக்க...

கலந்தாய்வுக்கு செல்லும் ஆசிரியர்கள் ஒருமணி நேரம் முன்னதாகவே செல்ல கேட்டுக்கொள்கிறோம். கலந்தாய்வு மையங்களில் மாவட்டத்திற்கு உட்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ள பள்ளிகளின் பட்டியல் ஓட்டபட்டிருக்கும்... குறைதபட்சம் 5 இடங்களையாவது வரிசைவாரியாக தேர்வு செய்து அப்பள்ளிகளை குறித்து, பதவி நிலை குறித்து, பள்ளிக்கான போக்குவரத்து வசதிகள் குறித்து நன்கு அறிந்துக்கொண்டு கலந்தாய்வு மையத்திற்குள் செல்லுங்கள்.... கலந்தாய்வு மையத்திற்குள் உங்களை தவிர யாரையும் அனுமதிக்க மாட்டார்கள் என்பதை அனைவரும் அறியவேண்டியது மிக அவசியம்.

அறிவியல் ஆசிரியர்களுக்கு செப்.,1 ல் கருத்தாளர் பயிற்சி

அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் சார்பில், 9 மற்றும் 10 ம் வகுப்பு அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு, மண்டல அளவிலான கருத்தாளர் பயிற்சி முகாம், செப்.,1 முதல் 3 நாட்கள் நடக்கிறது.

ஆசிரியர் நியமன கவுன்சலிங் இன்று தொடக்கம்

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 14 ஆயிரத்து 700 பேருக்கு ஆசிரியர் பணி நியமனம் வழங்கும் கவுன்சலிங் இன்று தொடங்குகிறது.கடந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். இதில், சுமார் 45 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

அவர்களுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சான்று சரிபார்ப்பு நடத்தப்பட்டது.

Friday, August 29, 2014

7-வது முறையாக போட்டியின்றி அதிமுக பொதுச் செயலாளரானார் முதல்வர்


கலந்தாய்வு - கலந்தாய்வு மையத்திற்குள் உங்களை தவிர யாரையும் அனுமதிக்க மாட்டார்கள் - லஞ்சம் கொடுத்து ஏமாறவேண்டாம்

கலந்தாய்வுக்கு செல்லும் ஆசிரியர்கள் ஒருமணி நேரம் முன்னதாகவே செல்ல கேட்டுக்கொள்கிறோம். கலந்தாய்வு மையங்களில் மாவட்டத்திற்கு உட்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ள பள்ளிகளின் பட்டியல் ஓட்டபட்டிருக்கும்... குறைதபட்சம் 5 இடங்களையாவது வரிசைவாரியாக தேர்வு செய்து அப்பள்ளிகளை குறித்து, பதவி நிலை குறித்து, பள்ளிக்கான போக்குவரத்து வசதிகள் குறித்து நன்கு அறிந்துக்கொண்டு கலந்தாய்வு மையத்திற்குள் செல்லுங்கள்.... கலந்தாய்வு மையத்திற்குள் உங்களை தவிர யாரையும் அனுமதிக்க மாட்டார்கள் என்பதை அனைவரும் அறியவேண்டியது மிக அவசியம்.

TNTET CASES. :சென்னை உயர்நீதிமன்ற 2 ஆம் அமர்வுக்கு முன் 01,09.2014 திங்களன்று வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன

வரும் 01/09/2014 திங்கள் கிழமையன்று அனைத்து வழக்குகளும் விசாரணைக்கு வருகிறது. ஆனால் அவ்வழக்கினால் எவ்வித மாற்றமும் வராது என இறைவன் மீது நம்பிக்கை கொள்வோம்.

COURT NO. 2                                           HON'BLE MR JUSTICE SATISH K.AGNIHOTRI                                   HON'BLE  MR JUSTICE M.M.SUNDRESH                    TO BE HEARD ON MONDAY THE 1ST DAY OF SEPTEMBER 2014 AT 10.30 A.M.
 ------------------------------------------------------------------------------------------------                    

புதிய ஆசிரியர் நியமனம் - தொடக்கக் கல்வி - தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்ப உள்ளதால், 30.08.2014 மற்றும் 31.08.2014 ஆகிய இரு நாட்களும் அனைத்து DEEO / AEEO அலுவலகங்களும் அலுவல் நாட்களாக செயல்பட இயக்குநர் உத்தரவு

அகஇ - தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் - வலுவூட்டல்" என்ற தலைப்பில் குறுவளமைய அளவில் ஒரு நாள் பயிற்சி 06.09.2014 அன்று நடைபெறவுள்ளது.

அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.1002/அ11/பயிற்சி/அகஇ/2014, நாள்.  .08.2014ன் படி 2014-15ம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும் இணைந்து தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல்

அகஇ - உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "கணித திறன் மேம்பாட்டுப் பயிற்சி" என்ற தலைப்பில் வட்டார வளமைய அளவில் மூன்று நாள் பயிற்சி 10.09.2014 முதல் 12.09.2014 வரை நடைபெறவுள்ளது.

அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.1002/அ11/பயிற்சி/அகஇ/2014, நாள்.  .08.2014ன் படி 2014-15ம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும் இணைந்து உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "கணித திறன் மேம்பாட்டுப் பயிற்சி"

கலந்தய்வுக்கு செல்வோர் கவனிக்க...

கலந்தய்வுக்கு செல்வோர் கவனிக்க... 

# ஆன்லைன் கலந்தாய்வு அட்டவணையில் குறிப்பிட்டபடி உரிய நாட்களில் கலந்தாய்வு நடைபெறும் 

#. காலை 9 மணிக்கு கலந்தாய்வு துவங்க இருப்பதால், கலந்தாய்வில் கலந்து கொள்ள இருக்கும் அனைவரும் காலை 8.30 மணிக்கே உரிய இடத்திற்கு செல்லவும். 

APPOINTMENT COUNSELLING ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தெரிவுக்கடிதம் என்பது என்ன?

APPOINTMENT COUNSELLING ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தெரிவுக்கடிதம் என்பது என்ன? 
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தெரிவுக்கடிதம் என்பது அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ள இறுதி தேர்வு முடிவே ஆகும்

புதிய ஆசிரியர் நியமனம்; 32 மாவட்ட வாரியாக இணையதள வாயிலாக கலந்தாய்வு நடைபெறவுள்ள இடங்கள்


அரசின் செய்திக்குறிப்பு - புதிய ஆசிரியர்கள் நியமனத்திற்கான அறிவிப்பு; காலை 9மணி முதல் இணையதள வாயிலாக அந்தந்த மாவட்டத்தில் நடைபெறவுள்ளது

g¤Âç¡if¢ brŒÂ

kh©òäF jäHf Kjyik¢r® mt®fë‹ c¤Âué‹go  MÁça® nj®Î thça¤jhš bjçÎ brŒa¥g£L, MÁça® nj®Î thça¤Â‹ Ïizajskhd www.trb.tn.nic.in -š btëæl¥g£LŸs g£oaèš Ïl« bg‰WŸs 14,700 MÁça®fS¡fhd ãakd¡ fyªjhŒÎ Ïizajs« thæyhf, el¤j¥glΟsJ. muR k‰W« efuh£Á ca®ãiy/ nkšãiy¥ gŸëfëš cŸs  KJfiy MÁça®fŸ / g£ljhç MÁça®fŸ fhè¥gâæl§fŸ k‰W« muR /efuh£Á/ Cuh£Á x‹¿a eLãiy/ bjhl¡f¥ gŸëfëš cŸs g£ljhç MÁça®fŸ/ Ïilãiy MÁça®fŸ fhè¥gâæl§fS¡F MÁça® nj®Î thça« _y« neuo ãakd¤Â‰fhfbjçÎ brŒa¥g£l gâehLe®fS¡F Ïizajs« thæyhf¡ Ñœ¡f©l m£ltizæ‹go fhiy 9 kâ Kjš fyªjhŒÎ el¤j¥g£L, gâãakd MizfŸ tH§f¥gl cŸsd.

இடைநிலை ஆசிரியர்கள் 5% மட்டுமே நியமனம்

தேர்ச்சி பெற்ற மீதமுள்ள 95 சதவீதம் பேர் அதிர்ச்சி.கூடுதலாக 5 ஆயிரம் பணியிடங்களாவது நிரப்பப்படுமா? தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் சுமார் 10,726 பெயர்கள் தேர்வுப் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளன.  ஆனால் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 30000 பேர்களிலிருந்து வெறும் 1667 பேர்கள் மட்டுமே தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

TNTET & PGTRB: பள்ளியை தேர்ந்தெடுப்பது எப்படி?

தங்களுக்கான பள்ளியை தேர்ந்தெடுப்பதில் பின்வரும் காரணங்களை உற்று நோக்கவும்.

1)பள்ளியில் உள்ள காலிப்பணியிடம் Deployment Post- ஆக மாற வாய்ப்பு உள்ளதா?

மாணவர்களுக்கு பயிற்சி ஏடு வழங்கும் திட்டம் துவக்கம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவ, மாணவியருக்கு, கையெழுத்து பயிற்சி ஏடு, ஓவியப் பயிற்சி ஏடு, நாட்காட்டியுடன் இணைந்த குறிப்பேடு வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா, நேற்று, தலைமைச் செயலகத்தில் துவக்கி வைத்தார்.

மாணவர்களிடம் மோடி நேரடியாக பேச்சு : ஆசிரியர் தினத்தன்று சிறப்பு ஏற்பாடு

ஆசிரியர் தினத்தன்று, பள்ளி மாணவர்களிடம், பிரதமர் மோடி பேசுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்தியா முழுவதும் செப்., 5ம் தேதி ஆசிரியர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அன்று, மத்திய மற்றும் மாநில அளவில் சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, கவுரவிக்கப்படுவது வழக்கம். பிரதமராக மோடி பதவியேற்ற பின் வரும், இந்த கல்வியாண்டு ஆசிரியர் தினத்தில், இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுடன் பேச உள்ளார்.

மாவட்ட வாரியாக கலந்தாய்வு நடைபெறும் இடம் அறிவிப்பு

 பணிநாடுநர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நுழைவுச் சீட்டில் (Hall ticket) குறிப்பிடப்பட்டுள்ள அவர்களது இருப்பிட முகவரியில் உள்ள மாவட்டத்தில், பின்வரும் இடங்களில் நடைபெறும் கலந்தாய்வில் அவர்களது கல்விச் சான்றுகள் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தெரிவுக் கடிதம் ஆகியவற்றுடன் தவறாமல் கலந்து கொள்ளுமாறு பணிநாடுநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

14,700 புதிய ஆசிரியர்களுக்கு நாளை முதல் பணி நியமனம்

புதிதாக தேர்வு பெற்ற, 14,700 ஆசிரியர்களுக்கு, பணி நியமன உத்தரவு வழங்குவதற்கான கலந்தாய்வு, நாளை முதல், 'ஆன்லைன்' வழியில் நடக்கிறது. நேற்று, பணி நியமன ஆணை வழங்குவதற்கு அடையாளமாக, ஏழு பேருக்கு, தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஜெயலலிதா, பணி நியமன ஆணையை வழங்கினார்.

புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட 14,700 ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நாளை தொடங்குகிறது - பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன்

புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட 14,700 ஆசிரியர்களை பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு நாளை (சனிக்கிழமை) முதல் 4–ந் தேதி வரை நடக்கிறது

ஆசிரியர்கள் தேர்வு

முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்திரவின்படி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளமான www.trb.tn.nic.in –ல் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள 14,700 ஆசிரியர்களுக்கான நியமன கலந்தாய்வு இணையதளம் வாயிலாக நடத்தப்படவுள்ளது.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு 30-08-2014 முதல் 05-09-2014 வரை கலந்தாய்வு

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்திரவின்படி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளமான www.trb.tn.nic.in- ல் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ள 14,700 ஆசிரியர்களுக்கான நியமனக் கலந்தாய்வு இணையதளம்
வாயிலாக, நடத்தப்படவுள்ளது.

TET & PGTRB Posting - Press News

பணிநாடுநர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நுழைவுச் சீட்டில் (Hall Ticket) குறிப்பிடப்பட்டுள்ள அவர்களது இருப்பிட முகவரியில் உள்ள மாவட்டத்தில், நடைபெறும் கலந்தாய்வில் அவர்களது கல்விச் சான்றுகள் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தெரிவுக் கடிதம் ஆகியவற்றுடன் தவறாமல் கலந்து கொள்ளுமாறு பணிநாடுநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்  - CEO Vellore

Thursday, August 28, 2014

ஆகஸ்ட் 30 முதல் ஆசிரியர் பணி கலந்தாய்வு

ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 14,700 பேருக்கு ஆகஸ்ட் 30 முதல் நியமனக் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்:

முதுகலை ஆசிரியர்கள்(மாவட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு)- ஆகஸ்ட் 30

TET & PGTRB ஆன்லைன் கலந்தாய்வு எவ்வாறு நடைபெறும்?

ஆன்லைன் கலந்தாய்வு அட்டவணையில் குறிப்பிட்டபடி உரிய நாட்களில் நடைபெறும். கலந்தாய்வு நடைபெறும் இடம் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகத்தால் நாளை அறிவிக்கப்படும்.
காலை 9 மணிக்கு கலந்தாய்வு துவங்க இருப்பதால், கலந்தாய்வில் கலந்து கொள்ள இருக்கும் அனைவரும் காலை 7.30 மணிக்கே உரிய இடத்திற்கு செல்லவும்.

Flash News: புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு அறிவிப்பு

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு அறிவிப்பு.

கலந்தாய்வு online மூலம்  அந்தந்த  மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


முதுகலை ஆசிரியர்கள்
மாவட்டத்திற்குள்-30.08.2014
வேறு மாவட்டம் -31.08.2014

Tamilnadu Teachers Education University - M.Ed Examination Results - MAY/JUNE 2014

ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின்கீழ் வழங்கப்படும் மாதாந்திர குறைந்தபட்ச பென்ஷன் ஆயிரம் ரூபாயாக உயர்வு - பி.எஃப். பிடித்தம் செய்ய மாத வருமான உச்சவரம்பு 15 ஆயிரம் ரூபாயாக அதிகரிப்பு

ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின்கீழ் வழங்கப்படும் மாதாந்திர குறைந்தபட்ச பென்ஷன் ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், PF பிடித்தம் செய்ய மாத வருமான உச்சவரம்பு 15 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

அரசின் செய்திக்குறிப்பு - 14700 ஆசிரியர்கள் நியமனத்திற்கு முன்னோடியாக மாண்புமிகு முதல்வர் இன்று 7 ஆசிரியர்களுக்கு நியமன ஆணை வழங்கினார்

அனைத்து காரியங்களிலும் வெற்றி கிட்டட்டும்: முதல்வர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து

அனைவருக்கும் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி கிட்டட்டும்; அன்பும், அமைதியும் நிலவட்டும்; நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும் என முதல்வர் ஜெயலலிதா விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

14,700 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை: ஜெயலலிதா வழங்கினார் - தினகரன்

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வான 14,700 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

7 ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கினார் முதல்வர்.தமிழக அரசு செய்திக் குறிப்பு

மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்று கடந்த 3 ஆண்டுகளில் 53,288 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப் பட்டுள்ளன.

ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்வது எப்படி?

 வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை தொடர்ந்து பெற உறுதிமொழி விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்று மற்றும் ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்வது குறித்து நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் டாக்டர் ம.மகேஸ்வரி விளக்குகிறார்.

அணைத்து அரசு ஊழியர்களுக்கும் ஆகஸ்ட் மாத சம்பளம் இன்றே கிடைத்துவிடும்.

விநாயகர் சதுர்த்தி தொடர்ந்து விடுமுறை வருவதால் ஆகஸ்ட் மாதத்திற்கான ஊதியம் இன்றே வழங்க அரசு உத்தரவு  பிறப்பித்துள்ளதாக தெரிகிறது.

2 மாதங்களுக்கு ஒருமுறைஆசிரியர் பணிபதிவேடு சரிபார்க்க தொடக்க கல்வித்துறை உத்தரவு.!!

ஆசிரியர்களின் பணி பதிவேடுகளை 2 மாதங்களுக்கு ஒரு முறை சரிபார்த்து உறுதி செய்யுமாறு தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஓராண்டு இழுபறிக்கு பின்னர் தமிழகத்தில் 1656 இடைநிலை ஆசிரியர்கள் பட்டியல் ரிலீஸ்!

தமிழகத்தில் தொடக்க கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர்கள் பணிக்கு
1,656 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒராண்டு இழுபறிக்கு பின்னர் தேர்வு பட்டியல் வெளியானதால் ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தில் BT காலிப்பணியிடங்கள்

தருமபுரி மாவட்டத்தில் உதேசமாக கீழ்கண்ட எண்ணிக்கையில் BT காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிகின்றது.

Tamil - 29

 Maths - 44

TNTET - பணியிட கலந்தாய்விற்கு செல்லவிருக்கும் நண்பர்கள் கவனத்திற்கு

பணியிட கலந்தாய்விற்கு செல்லவிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் முதலில் வாழ்த்துக்கள் ...
சென்ற ஆண்டு நடந்த கலந்தாய்விற்கு போது பின்பற்றப்பட்ட நடை முறை...

குரூப் 4 தேர்வு அறிவிக்கை: அடுத்த மாதம் வெளியாகிறது: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

சுமார் 3 ஆயிரம் பணியிடங்களை உள்ளடக்கிய குரூப் 4 தேர்வுக்கான அறிவிக்கை அடுத்த மாதம் வெளியாகும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் (பொறுப்பு) எஸ்.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

பிளஸ் 2 கணித விடைத்தாள் நகல்களில் 4 பக்கங்கள் மாயம் - ஐகோர்ட் உத்தரவு

பிளஸ் 2 கணித விடைத்தாள் நகல்களில் 4 பக்கங்கள் மாயமானதால், கூடுதல் மதிப்பெண் வழங்க அரசுத் தரப்பு ஒப்புக்கொண்டது. மனுதாரரின் மகனுக்கு பொறியியல் மாணவர் சேர்க்கையில், ஒரு இடம் ஒதுக்க அண்ணா பல்கலைக்கு, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

புதிய ஆசிரியர் பணி நியமனம் : முதல்வர் இன்று வழங்குகிறார் - தினமலர்

பள்ளிக்கல்வித் துறையில், 12 ஆயிரம் புதிய ஆசிரியர்களுக்கு, பணி நியமனம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைக்கும் விதமாக, முதல்வர் ஜெயலலிதா, இன்று தலைமைச் செயலகத்தில், சில பேருக்கு, பணி நியமன உத்தரவை வழங்குகிறார்.

TNTET - புதிய ஆசிரியர் பணி நியமனம் : முதல்வர் இன்று வழங்குகிறார்

புதிதாக தேர்வான ஆசிரியர்களில் 7 பேருக்கு இன்று நியமன ஆணை வழங்குகிறார் முதல்வர் - புதிய தலைமுறை செய்தி

12 ஆயிரம் புதிய ஆசிரியர்களுக்கு பணி நியமனம் : முதல்வர் இன்று வழங்குகிறார்!!!

பள்ளிக்கல்வித் துறையில், 12 ஆயிரம் புதிய ஆசிரியர்களுக்கு, பணி நியமனம்வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைக்கும் விதமாக, முதல்வர் ஜெயலலிதா, இன்று தலைமைச் செயலகத்தில், சில பேருக்கு, பணி நியமன உத்தரவை வழங்குகிறார். 

இரண்டு ஆண்டுகளுக்கு TET தேர்வு வேண்டாம் தேர்வர்கள் வேண்டுகோள் - தினத்தந்தி

தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இடை நிலை ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்ட 1,649 பேர் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இடைநிலை ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்ட 1,649 பேர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

7 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் இன்று வழங்குகிறார் - தினமணி

Wednesday, August 27, 2014

இடைக்கால உத்தரவு:நியமனம் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 1 அதிகாரிகள் 83பேர் பணியில் தொடரலாம்

நியமனம் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 1 அதிகாரிகள் 83பேர் பணியில் தொடரலாம் என உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மேல்நிலைத் தேர்வு 2014 - "சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் தனி தேர்வர்களிடம் விண்ணப்பம் வரவேற்பு; 01.09.2014 / 02.09.2014 ஆகிய தேதிகளில் ஆன்-லனில் விண்ணப்பிக்க வேண்டும்

பள்ளி பராமரிப்பு நிதி ஆய்வுசெய்யும் உத்தரவால் தலைமையாசிரியர்கள் கலக்கம்!

சிவகங்கை மாவட்டத்தில் அரசு பள்ளிகளுக்கு எஸ்.எஸ்.ஏ., சார்பில், வழங்கிய பள்ளி பராமரிப்பு நிதி குறித்து, ஆய்வுசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளதால், தலைமை ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

10, 12ம் வகுப்பு காலாண்டு தேர்வை முழு ஆண்டு தேர்வு போல் நடத்த வேண்டும்

10, 12ம் வகுப்பு மாணவர்களின் உண்மை யான பாட அறிவை பரிசோதிக்கும் வகையில் காலாண்டு தேர்வினை முழு ஆண்டு தேர்வு போல நடத்த வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தியுள் ளது.

தொழில் கல்வி பயிலும் எஸ்.சி,எஸ்டி மாணவர்களுக்கு உதவி தொகை!

தொழில்கல்வி படிக்கும் எஸ்சி, எஸ்டி மாணவர்கள் 500 பேருக்கு ஓஎன்ஜிசி நிறுவனம் மாதம் ரூ.4,000 கல்வி உதவித்தொகை வழங்கவுள்ளது. பிஇ, பிடெக், எம்பிபிஎஸ், எம்பிஏ, எம்எஸ்சி (ஜியாலஜி), எம்எஸ்சி (ஜியோ-பிசிக்ஸ்) படிப்புகள் படிக்கும் சிறந்த தாழ்த் தப்பட்ட, பழங்குடியின வகுப் பைச் சேர்ந்த மாணவர்கள் 500 பேருக்கு மாதம் ரூ.4 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.48 ஆயிரம் கல்வி உதவித்தொகையை எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ஓஎன்ஜிசி) வழங்குகிறது.

Wanted Assistant Professors in Aided Courses!!



இந்திய நடுவணரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 669 நிர்வாகப் பணியிடங்கள்

 நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் கே.வி.எஸ்., என்ற சுருக்கமான பெயரால் பலராலும் அறியப்படுகின்றன. கல்வித் துறையில் தனக்கென்று தனி முத்திரையைப் பதித்து வரும் இந்தப் பள்ளிகளில் காலியாக உள்ள 669 நிர்வாகப் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

செயல்முறை கற்றலுக்கு முக்கியத்துவம் தரும் அரசு நடுநிலைப்பள்ளி: களப் பயிற்சியில் அசத்தும் மாணவ, மாணவியர்

பொதுத் தேர்வுகளை மையப்படுத்தி பாடம் நடத்தி மாணவ, மாணவியரை மனப்பாடம் செய்ய வற்புறுத்தும் பள்ளிகள் ஏராளம். தனியார் பள்ளிகளுக்கு ஈடாக தேர்ச்சியைக் காட்டும் அரசுப் பள்ளிகளும் தற்சமயம் அதிகரித்து வருகின்றன.

FLASH NEWS : TNTET PAPER I - 1649 பேருக்கான தேர்வு பட்டியலை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம் - Direct Recruitment of Secondary Grade Teachers 2012 - 2013 - Click here for Provisional Selection List of Candidates SGT - Released today

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

Dated: 27-08-2014

Member Secretary

கலப்புத் திருமணம் செய்வோர் வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற, பதிவு செய்ய வேண்டிய சான்றுகள் என்ன?

கலப்புத் திருமணம் பற்றியும், கலப்புத் திருமணம் செய்வோருக்கான முன்னுரிமைகள் குறித்தும் விளக்குகிறார் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் டாக்டர் ம.மகேஸ்வரி. கலப்புத் திருமணம் செய்துகொள்ள நிபந்தனைகள் ஏதும் உண்டா?

Direct Recruitment of B.T. Assistant 2012 - 2013 - LIST OF CANDIDATES SELECTED FOR B.T TAMIL (ADDITIONAL VACANCIES FOR DSE)


மாணவர்களை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தக்கூடாது - பள்ளிகளுக்கு மெட்ரிகுலேசன் இயக்குனரகம் சுற்றறிக்கை

மாணவர்களை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தக்கூடாது என்று மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் சுற்றறிக்கை விடுத்துள்ளது.

TET அறவழி உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது

நேற்றைய (26.08.2014) 9வது நாள் உண்ணாவிரத  போராட்டத்தோடு இந்த அறவழி உண்ணாவிரத  போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது ...

TNTET Article: அடிப்படை கல்வி மேம்பட அதிக அளவில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுமா?

தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கையில் உள்ளவை அரசு ஆரம்பப் பள்ளிகள். தற்போது உள்ள சூழ்நிலையில் அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் தமிழ் வழியோடு, ஆங்கில வழி கல்வியையும் அவசியம் கொண்டு வரவேண்டும். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பதுபோல் இளம் வயதிலேயே அவனுக்கு ஆங்கில அறிவை ஊட்டிவிட்டால் மாணவர்களது எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.

தமிழ் பண்டிட் மதிப்பெண்ணை வெயிட்டேஜ் கணக்கில் சேர்க்க வேண்டும்

சேரன்மகாதேவி ஆசிரியை ஐகோர்ட்டில் வழக்கு, பள்ளி கல்வித்துறை செயலருக்கு நோட்டீஸ்.தமிழ் பண்டிட் படிப்பில் பெற்ற மதிப்பெண்ணை, வெயிட்டேஜ் மதிப்பெண்ணில் கணக்கிட கோரிய மனுவில் பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை
உத்தரவிட்டுள்ளது.
        

குரூப் 2 தேர்வு ரிசல்ட் 15 நாளில் வெளியீடு

குரூப் 2 தேர்வுக்கான ரிசல்ட் இன்னும் 15 நாட்களில் வெளியிடப்படும்‘ என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலசுப்பிரமணி யன் கூறியுள்ளார்.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) செ. பாலசுப்பிரமணியன் நேற்று அளித்த பேட்டி:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், தமிழ்நாடு மாநில நீதிப்பணியில் காலியாக உள்ள 162 உரிமையியல் நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அரசு பள்ளியில் 2 ஆசிரியர்கள், ஒரு சத்துணவு அமைப்பாளர், 2 உதவியாளர்கள்.. 3 மாணவர்கள்...!


கமுதி அருகே 3 மாணவர்கள் மட்டுமே பயிலும் அரசு பள்ளியில் 2 ஆசிரியர்கள் உள்பட 5 பேர் பணியில் உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே காடாமாங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளாங்குளத்தில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தற்போது 3 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். இவர்களில் ஒருவர் 4ம் வகுப்பிலும் மற்ற இருவர் 5ம் வகுப்பிலும் படித்து வருகின்றனர். மூன்று மாணவர்கள் மட்டுமே படிக்கும் இப்பள்ளியில் 2 ஆசிரியர்கள், ஒரு சத்துணவு அமைப்பாளர், 2 உதவியாளர்கள் என 5 பேர் பணியில் உள்ளனர். இவர்களுக்காக அரசு மாதந்தோறும் சம்பளம் மற்றும் இதர செலவுகள் என ^80 ஆயிரம் வரை வழங்கி வருகிறது.

தமிழ்நாடு அஞ்சல் தபால் வட்டத்தில் உதவியாளர், எம்டிஎஸ் பணி

இந்திய அரசின் அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் விளையாட்டு வீரர்களுக்கான Postal Assistant, Sorting Assistant, Postman, Multi Tasking Staff பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்யக் கோரி செப்.1-இல் பேரணி

ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வலியுறுத்தி வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி சென்னையில் கவன ஈர்ப்புப் பேரணி நடைபெற உள்ளது.

இளநிலை, முதுகலை பாட வேறுபாடு - ஆசிரியர் நியமனம் கோரிய மனு : ஐகோர்ட் தள்ளுபடி

இளநிலை, முதுகலையில் வெவ்வேறு பாடங்கள் படித்துள்ளதால், முதுகலை பட்டதாரி ஆங்கில ஆசிரியராக நியமிக்க கோரிய மனுவை, மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. மதுரை லதா தாக்கல் செய்த மனு: இளநிலை (பி.எஸ்.சி., -வேதியியல்), முதுகலை (எம்.ஏ.,- ஆங்கில இலக்கியம்), பி.எட்.,(ஆங்கிலம்) படித்துள்ளேன். தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தேன்.

வால்பாறை அரசு பள்ளியில் தமிழ் படிக்கும் வட மாநில குழந்தைகள்

வால்பாறை அருகே, அரசுப் பள்ளியில், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசத்தை சேர்ந்த குழந்தைகள், தமிழ் படிக்கின்றனர். கோவை மாவட்டம், வால்பாறை எஸ்டேட் பகுதி யில், தொழிலாளர் பற்றாக்குறையால், அசாம், பீகார், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட் போன்ற வெளி மாநிலங்களிலிருந்து, தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

3,000 இடங்களுக்கான 'குரூப் 4' தேர்வு : டி.என்.பி.எஸ்.சி., தலைவர் தகவல்

 பல துறைகளில் காலியாக உள்ள, 3,000 இடங்களை நிரப்ப, விரைவில், குரூப் 4 போட்டித் தேர்வு அறிவிக்கப்படும்,'' என, டி.என்.பி.எஸ்.சி., (அரசு பணியாளர் தேர்வாணையம்) தலைவர், பாலசுப்ரமணியன் (கூடுதல் பொறுப்பு) தெரிவித்தார்.

இ.பி.எப்., டிபாசிட்களுக்கு 8.75 சதவீத வட்டி நிர்ணயம்

''தொழிலாளர் சேமநல நிதியான இ.பி.எப்., டிபாசிட்களுக்கு, நடப்பு நிதியாண்டில், 8.75 சதவீத வட்டி வழங்கப்படும்,'' என, சேமநல நிதி அமைப்பின் மத்திய ஆணையர் ஜலான் கூறினார். தொழிலாளர் சேமநல நிதி டிபாசிட்களுக்கு, நடப்பு நிதியாண்டில் (2014 15) வழங்கப்பட உள்ள வட்டி வீதம் குறித்து முடிவு செய்ய, தொழிலாளர் சேமநல நிதி அமைப்பின், மத்திய அறக்கட்டளை வாரிய கூட்டம், டில்லியில் நேற்று நடைபெற்றது.

Tuesday, August 26, 2014

மாவட்ட அளவில் சிறந்தப்பள்ளியாக தேர்தெடுக்கப்பட்ட பள்ளி "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" சார்பாக வாழ்த்துக்கள்

மாவட்ட அளவில் சிறந்தப்பள்ளியாக தேர்தெடுக்கப்பட்டு மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.வீரமணி அவர்கள், அரசு முதன்மை செயலர் திரு.சபீதா அவர்கள் ஆகியோரிடமிருந்து விருது பெற்ற  வேலூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் ஆம்பூர் நகராட்சி நடுநிலைப்பள்ளி,  பெதேலேகேம் தலைமை ஆசிரியர் திரு,ஜோ சத்தியகுமார்  அவர்களையும் உடன் பணியாற்றும் ஆசிரியர்களையும் இன்று "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை"  சார்பாக சங்கத்தின் வேலூர் மாவட்ட செயலாளர் திரு.சரவணன், ஆம்பூர் நகரத் தலைவர் திரு.ரமேஷ் பிரபு, நகர பொருளாளர் திரு.பாலசுப்பிரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சென்று வாழ்த்தினார்கள். 



Direct Recruitment of B.T. Assistant 2012 - 2013 - LIST OF CANDIDATES SELECTED FOR B.T TAMIL (ADDITIONAL VACANCIES FOR DSE)


Direct Recruitment of B.T. Assistant 2012 - 2013 - Click here for List of Candidates Selected for B.T. Tamil (Additional Vacancies for DSE)

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

Dated: 26-08-2014

Member Secretary

UDISE 2014-15-செயற்கைகோள் வழியில் ஒளிபரப்புதல்-புள்ளி விவரங்கள் சேகரித்தல் - தொடர்பான இயக்குனர் செயல்முறை


TNTET - "SELECT" ஆகாத ஒரு "SENIOR" ஆசிரியரின் மடல்

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் . 
நான் select ஆகாத ஆசிரியை. நான் என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 

1. இப்போது உள்ள weightage system அறிவித்தபோதே இதனால் பாதிப்பு வரும் என நாம் அறிவோம். நம்முடைய friends circle லில் இதனைப் பற்றி விவாதித்திருப்போம். அப்போதே TET எழுத உள்ள அனைவரும் சேர்ந்து இந்த weightage system வேண்டாம் . யாரும் பாதிக்கப்படாத weightage system பின்பற்ற வேண்டும் என போராட தவறியதின் விளைவு தான் இது. 

மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தும் விதமாக வீடியோ பாடப் புத்தகங்கள் ! - அக்டோபர் மாதம் அரசுப் பள்ளி களுக்கு வழங்க நடவடிக்கை

அரசுப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தும் விதமாக பாடப் புத்தகங்கள் வீடியோவாக தயாரிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதம் அரசுப் பள்ளி களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விரைவில் 3000 குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு முடிவுகள் இன்னும் 15 நாட்களில் வெளியிடப்படும்.டி.என்.பி.எஸ்.சி. தலைவர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தகவல்.சார்பதிவாளர் உட்பட1,064 பணியிடங்களுக்கு கடந்த டிசம்பரில் குரூப்-2 தேர்வு நடந்தது.

TNTET-PAPER I: BCM TET TOTAL TAMILNADU ABOVE 90 MARKS CANDIDATE WEIGHTAGE LIST

TRB PG TAMIL MEDIUM :பொருளியல், வணிகவியல் பட்டியலில் தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான பணியிடங்கள் காலியாக வைக்கப்பட்டுள்ளது

புதிதாக வெளியிடப்பட்டுள்ள பொருளியல், வணிகவியல் பட்டியலில் தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான பணியிடங்கள் சில காலியாக வைக்கப்பட்டுள்ளன. இதனால் தமிழ் வழியில் படித்த சிலர் காரணம் தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்

உலகின் சாதனைப் பெண் “அன்னை தெரசா” பிறந்த தினம் இன்று - இவர் ஒரு உயர்நிலைப்பள்ளி ஆசிரியையாக வாழ்கையை தொடங்கியவர்

நீலநிறக் கரைபோட்ட வெள்ளைக் கைத்தறிச் சேலை. சுருக்கங்கள் நிறைந்த முகம். கருணை பொங்கும் விழிகள். இன, மத, பிரதேச வேறுபாடற்ற சேவை மனப்பாங்கு. இவற்றின் மொத்த உருவமாகத் திகழ்ந்த அன்னை தெரசா ‘உலகின் சாதனைப் பெண்‘களில் இன்று இடம்பெறுகின்றார்.

1910 ஆகஸ்ட் 26 மெஸிடோனியாவில் பிறந்த அல்பேனிய இனத்தவரான இவரது இயற்பெயர் அக்னஸ் கொன்ஸா பொஜாக்கியூ (Agnes Gonxha Bojaxhiu) என்பதாகும். அல்பேனிய மொழியில் Gonxha என்பதன் பொருள் ரோசா மொட்டு அல்லது சின்னஞ்சிறு மலர் என்பதாகும்.

TNTET BT ASST :பாடவாரியாக கூடுதல் காலிப்பணியிட விவரம்

பள்ளிக்கல்விதுறையில் தமிழுக்கு 138 கூடுதல் பணியிடங்களுடன் பிறத்துறை காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை TRB வெளியிட்டது 
பாடவாரியாக கூடுதல் காலிப்பணியிட விவரம் 
TAMIL -138 
ENGLISH - 61 

விரைவில் புதிய ஆசிரியர்கள் நியமிப்பதற்கான உத்தரவு, தகுதியானவர்களுக்கு கிடைக்க வாய்ப்பு

தமிழக அரசு பள்ளிகளில் புதிதாக முதுகலை, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதற்கான,முதல்கட்ட நடவடிக்கையில் பள்ளிக்கல்வித்துறை இறக்கியுள்ளது.அதன்படி பாடவாரியாக உள்ள காலி இடங்களின் எண்ணிக்கை குறித்த முக்கிய ஆலோசனை கூட்டம் சென்னையில் நாளை நடக்கிறது. தொடர்ச்சியாக புதிய ஆசிரியர்கள் நியமிப்பதற்கான கலந்தாய்வு தேதியும் விரைவில் வெளியாக உள்ளது.

எம்.எட்.,படிப்புக்கு ஆக.,31ல் நுழைவுத்தேர்வு

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி மையம் மூலம் முதுகலை கல்வியியல் படிப்புக்கு ஆக.,31ம் தேதி நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.

நல்ல பள்ளிக்கு என்ன தேவை? மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் கருத்தறியும் நிகழ்ச்சி

நல்ல பள்ளிக்கு என்ன தேவை என்பது தொடர்பாக மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோரின் கருத்துக்களை அறியும் நிகழ்ச்சி சென்னை மீனம்பாக்கம் அரிமா சங்கம் சார்பில் சனிக்கிழமை நடைபெறுகிறது.

SSA - 60 ஆயிரம் கணிதப் பாட ஆசிரியர்களுக்குப் பயிற்சி

ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான கணிதப் பாட ஆசிரியர்கள் 60 ஆயிரம் பேருக்கு "அனைவருக்கும் கல்வி' இயக்கத் திட்டத்தின் கீழ் பயிற்சி வழங்கப்பட உள்ளது. முதல்கட்டமாக, தமிழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட கருத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு சென்னையில் திங்கள்கிழமை முதல் 2 நாள்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

பிளஸ் 2 முடித்தவர்களுக்கு ரூ.5,000 : 32 மாவட்டத்திற்கு ரூ.71 கோடி

அரசு பள்ளிகளில் 2013-14ல் பிளஸ் 2 முடித்த ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ.5 ஆயிரம் இடை நிற்றல் கல்வி தடுத்தல் நிதி வட்டியோடு வழங்க அரசு ரூ.71 கோடி ஒதுக்கியுள்ளது.

ஆர்.டி.இ., 'அட்மிஷன்' தராத 1,937 பள்ளிகளுக்கு 'நோட்டீஸ்!'

'இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,) கீழ், மாணவர்களை சேர்க்காத, 1,937 தனியார் பள்ளிகளுக்கு, செப்., முதல் வாரத்தில், 'நோட்டீஸ்' அனுப்பி, விசாரணைக்குப் பின், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வித் துறை வட்டாரம், நேற்று தெரிவித்தது.

இ.பி.எப்., வட்டி இன்று முடிவாகிறது

தொழிலாளர் சேமநல நிதியான, இ.பி.எப்.,க்கான வட்டி வீதம் குறித்து, இன்று முடிவு செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலாளர்களின் சேமநல நிதிக்கு, இந்த ஆண்டு (2014 15), 8.7 சதவீத வட்டி வழங்கலாம் என, பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

முதுகலை ஆசிரியர் பட்டியல் வெளியீடு

முதுகலை ஆசிரியர் தேர்வில், மீதம் இருந்த இயற்பியல், வணிகவியல் மற்றும்பொருளியல் ஆகிய, மூன்று பாடங்களுக்கான இறுதித் தேர்வு பட்டியலை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), நேற்றிரவு வெளியிட்டது. 

தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணி: ‘கட்-ஆப்’ மதிப்பெண்ணை நிர்ணயிப்பதில் குளறுபடி இருப்பதாக வழக்கு

தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ‘கட்-ஆப்‘ மதிப்பெண்ணை நிர்ணயிப்பதில்குளறுபடி இருப்பதாக தொடர்ந்த வழக்கில் ஆசிரியர் தேர்வு வாரியம் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

குரூப் 4ல் தேறியவர்கள் பரிதவிப்பு : பணியில் சேர்வதில் சிக்கல்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 'குரூப் 4' தேர்வில்வெற்றி பெற்று, பணி நியமன ஆணை கிடைத்தும், தமிழ்வழியில் பயின்ற தனித்தேர்வர் என்ற காரணத்திற்காக, பணியமர்த்தப்படாத பலரும் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். 

TRB அலுவலகத்திற்கு மனு

தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த திரு லக்ஷ்மணன்  என்பவர் TRB அலுவலகத்திற்கு கீழ்க்கண்டவாறு மனு அனுப்பியுள்ளார்.



ஆதிதிராவிடர், பழங்குடியினர் பள்ளி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு

CLICK HERE - WELFARE SCHOOL TRANSFER COUNSELLING PROC

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர், கணினி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு 2014-2015-ம் கல்வி ஆண்டுக்கான பொதுமாறுதல் (கலந்தாய்வு) அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் ஆன்-லைனில் நாளை (புதன்கிழமை) காலை 11.00 மணி முதல் நடைபெறும்.

Monday, August 25, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறைரத்தாகுமா? தந்தி டிவியில் சிறப்பு செய்தி ஒளிபரப்பு

FLASH NEWS : TNTET - DIRECT RECRUITMENT OF B.T ASSISTANT 2012-2013 - PAPER II ADDENDUM NOTIFICATION - RELEASED TODAY


PGTRB - PROVISIONAL SELECTION LIST AFTER REVISED CERTIFICATE VERIFICATION (Physics, Commerce and Economics Subject)



Teachers Recruitment Board  College Road, Chennai-600006

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 - 2013
PROVISIONAL SELECTION LIST AFTER REVISED CERTIFICATE VERIFICATION
(Physics, Commerce and Economics Subject)
          

Dated: 25-08-2014

Member Secretary

FLASH NEWS : TNTET - DIRECT RECRUITMENT OF B.T ASSISTANT 2012-2013 - PAPER II ADDENDUM NOTIFICATION - RELEASED TODAY

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

DIRECT RECRUITMENT OF B.T ASSISTANT 2012-2013

Dated: 25-08-2014

Member Secretary

தாள் 1 இல் BC க்கான TOP weightage marks

வேலைவாய்ப்பு இல்லாதவர்கள் உதவித் தொகை பெறுவது எப்படி?

வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகை, அதில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் சலுகை, அதற்கு விண்ணப்பிக்கும் வழிமுறை ஆகியவை குறித்து நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் டாக்டர் ம.மகேஸ்வரி விளக்கம் அளிக்கிறார்..

TNTET -PAPER I:TOP 304 Rank Holders in SCA Community

பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் பல்வேறு பணிகள் எஸ்எஸ்சி அறிவிப்பு!!


பெண் குழந்தைக்கான கல்வி உதவித்தொகை!!


தற்காலிக தொழில் கல்வி ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய அனைத்திந்திய ஆசிரியர் பேரவை கோரிக்கை - பள்ளிக்கல்வி அமைச்சர், முதன்மை செயலர் ஆகியோரை மாநிலப் பொதுச்செயலாளர் திரு.ஜார்ஜ் நேரில் வலியுறுத்தல்

அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின்  மாநில பொதுச்செயலாளர் திரு.ஜார்ஜ் அவர்கள்,   மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.வீரமணி அவர்கள், அரசு முதன்மை செயலர் திரு.சபீதா அவர்கள் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் திரு.ராமேஸ்வரமுருகன் அவர்கள் ஆகியோரை நேரில் சந்தித்து மேல்நிலைப்பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் பணிப்புரிந்து  வரும் தற்காலிக தொழில் கல்வி ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

அரசுப்பள்ளிகளில் காலியாகஇருக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை சேர்ப்பதற்காக அரசுப் பள்ளிகளில் பாடவாரியாக உள்ள காலி இடங்களின் எண்ணிக்கை குறித்த முக்கிய ஆலோசனை கூட்டம் சென்னையில் நாளை நடக்கிறது. தமிழக அரசுப்பள்ளிகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. காலாண்டுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில் சில அரசுப்பள்ளிகளில் முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாததால் பாடம் நடத்துவதில் சிரமம் ஏற்படுகிறது.

TNTET: ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறைரத்தாகுமா?

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறைரத்தாகுமா? தந்தி டிவியில் சிறப்பு செய்தி ஒளிபரப்பு(இன்று பிற்பகல் 3 மணிக்கு)

பகுதிநேர ஆசிரியர் கணக்கெடுப்பு

கடந்த 2012ம் ஆண்டில், எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் உடற்கல்வி, ஓவியம்,இசை, மற்றும் தையல் கல்வி கற்பிக்க, மாநிலம் முழுவதும் 16,549பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்; திருப்பூர் மாவட்டத்தில் 543 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 

சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு தமிழ்நாட்டில் 40 ஆயிரம் பட்டதாரிகள் எழுதினார்கள். 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத வரவில்லை

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட உயர் பதவிகளுக்காக சிவில் சர்வீசஸ்முதல்நிலை தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து 40 ஆயிரம் பேர் எழுதினார்கள். 50 சதவீதத்திற்கு மேற்பட்டோர் தேர்வு எழுத வரவில்லை.

தொடக்கக் கல்வி - வழக்கு - அரசாணை எண்.210, 146 ஆகியவற்றின் பலனை நீட்டித்து வழங்க கோரியும், அரசாணை எண்.216ன் படி ஆசிரியர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்யக் கோரி தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாணைகள் மீது சீராய்வு மனு தாக்கல் செய்து தற்போதைய நிலை குறித்த அறிக்கை கோரி இயக்குனர் உத்தரவு

கவுன்சலிங்கில் மறைக்கப்பட்ட இடங்களுக்கு நிர்வாக மாறுதல் என்ற பெயரில் பணி மாறுதல் உத்தரவு

மிழகத்தில் நடந்த கலந்தாய்வில் ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் இடங்கள் மறைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான ஆசிரியர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.தமிழகம் முழுவதும் கடந்த ஜூன் மாதம் இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு நடந்தது.

'பயிற்சி முடித்தும் டி.இ.ஓ., பதவி உயர்வு கிடைக்கலை' : தலைமை ஆசிரியர்கள் விரக்தி

மாநில அளவில் பதவி உயர்வு பட்டியலில் உள்ள தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி முடிந்தும், டி.இ.ஓ., பதவி உயர்வு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.