Ad Code

Responsive Advertisement

கையடக்க கணினி மூலம் கற்பிக்கும் முறை:மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிமுகம்!!

கையடக்க கணினி மூலம் பள்ளிகளில் நவீன கற்பிக்கும் முறையை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சென்னையில் வெள்ளிக்கிழமை 

அறிமுகப்படுத்தியது.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இந்திய கல்விப் பிரிவு இயக்குநர் பிரதீக் மேத்தா கையடக்க கணினியை (டேப்ளெட்) அறிமுகம் செய்து வைத்து பேசியது:
மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே நவீன வகுப்பறைச் சூழலை ஏதுவாக்கும் வகையில் கையடக்க கணினி கல்வி முறையை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் செயல்படுத்திவருகிறது.
உலக அளவில் 45 ஆயிரத்துக் மேற்பட்ட பள்ளிகளில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மென்பொருள் மூலம் கையடக்க கணினி முறையில் கற்பிக்கப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக தமிழகத்தைச் சேர்ந்த 4 பள்ளிகளில் இந்த முறையைச் செயல்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாணவர்கள் பள்ளிப் பாடத்திட்டத்துடன் உலகளாவிய தகவல்களையும் பெற முடியும் என்றார் பிரதீப் மேத்தா.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement