Ad Code

Responsive Advertisement

மாற்றுத்திறனாளிகள் பள்ளிகளில் விரைவில் சத்துணவு திட்டம் - முதல்வர் ஜெயலலிதா

110 விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கை: றீ மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு இல்லம் திருவள்ளூர், கடலூர், திருவாரூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சி, சேலம், வேலூர், மதுரை ஆகிய 11 மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன.

மீதமுள்ள 21 மாவட்டங்களில் மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள் அமைக்கப்படும். இதற்கென அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 1 கோடியே 92 லட்சத்து 10,800 ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.றீ தமிழ்நாட்டில் 14 வயதிற்கு மேற்பட்ட மன வளர்ச்சி குன்றியோருக்கான தங்கும்வசதி, உணவு மற்றும் தொழிற் பயிற்சியுடன் கூடிய 31 இல்லங்கள் 21 மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த இல்லங்கள் மேலும் தர்மபுரி, கரூர்,நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் ஆண்களுக்கான ஆறு இல்லங்கள்.விருதுநகர், அரியலூர், திருப்பூர், நீலகிரி, விழுப்புரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் பெண்களுக்கான ஐந்து இல்லங்கள் என 11 இல்லங்கள் திறக்க அரசு முடிவு எடுத்து உள்ளது. 

இதனால், அரசுக்கு ஒரு இல்லத்திற்கு, ஆண்டுக்கு, 9 லட்சத்து 66 ஆயிரத்து 800 ரூபாய் என்ற வீதம் 11 இல்லங்களுக்கு 1 கோடியே 6 லட்சத்து 34 ஆயிரத்து 800 ரூபாய் செலவினம் ஏற்படும். றீ மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கும் சிறப்பு பள்ளிகளில் மாணவர்களுக்கு தற்போது மதிய உணவு வழங்கப்படுவதில்லை. எனவே சத்துணவு திட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின், கட்டுப்பாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவியர்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம், உத்தேசமாக 1733 மாணவர்கள் பயன் பெறுவர். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 38 லட்சத்து 99,250 ரூபாய் தொடர் செலவினம் ஏற்படும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement