Ad Code

Responsive Advertisement

மாற்று திறனாளி குழந்தைகள் சேர்க்கை - தனியார் பள்ளிகள் விவரம் அளிக்க உத்தரவு

அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளில் சிறப்பு குழந்தைகளுக்கான சீட் விவகாரம் குறித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தக் கோரி, கல்வி இயக்குனரகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.டெல்லியில் உள்ள அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளில் மாற்று திறனாளி குழந்தைகளுக்கான சீட் ஒதுக்கீடு விவகாரம் குறித்து நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது.
அதில், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள் மாற்று திறனாளி குழந்தைகளுக்கென சிறப்பு கல்வியாளர்களை நியமிக்க வேண்டும்.அவர்களுக்குத் தேவையான இட வசதிகளையும் ஏற்படுத்தி, எவ்வித இடையூறும் இல்லாமல் செயல்படுத்த வேண்டும் என கடந்த 5.9.2012ம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக, 2 ஆண்டுகள் (4.9.2014) வரை அவகாசமும் நீதிமன்றம் வழங்கியது. ஆனால், இந்த விதிமுறைகளை எந்த தனியார் பள்ளிகளும் பின்பற்றவில்லை என மாற்றுத்திறனாளி குழந்தையின் பெற்றோர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த 2012ம் ஆண்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பள்ளிகளில் செயல்படுத்தக் கோரி கல்வி இயக்குனரகத்துக்கு உத்தரவிட்டது. மேலும், பள்ளிகளில் எத்தனை மாற்றுதிறனாளி குழந்தைகள் விண்ணப்பித்தனர் என்றும், எத்தனை பேருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது என்ற விவரத்தையும் வழங்குமாறு பள்ளிகளிடம் நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
இதையடுத்து, நீதிமன்றம் கேட்டுக் கொண்ட தகவலை பள்ளிகள் கல்வித்துறையின் வலைதளத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என கல்வி இயக்குனரகம் பள்ளிகளுக்கு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருடன் மாற்று திறனாளி குழந்தைகளையும் சேர்த்து, 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியுள்ளனர்.
ஆனால், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் அதிக அளவில் உள்ளனர். அவர்களுடன் மாற்று திறனாளி குழந்தைகளையும் இணைத்துள்ளதால் சீட் கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளது. இதனாலேயே, நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள புள்ளிகளின் விவரங்களையும் நீதிமன்றம் பள்ளிகளிடம் கேட்டுக் கொண்டது.
இதற்கான, தகவலை பள்ளிகள் உடனடியாக வழங்க வேண்டும் என கல்வி இயக்குனரகமும் பள்ளிகளுக்கு வலியுறுத்தியுள்ளது.

Post a Comment

2 Comments

  1. Stay updated with our latest news in Tamil from all over the world click here

    ReplyDelete
  2. Government thank you for the opportunity provided for Special children in Private School.Latest Tamil News Online

    ReplyDelete

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Ad Code

Responsive Advertisement