Ad Code

Responsive Advertisement

ஏ.ஐ.சி.டி.இ., உருவாக்கியுள்ள பணிதேடும் புதிய வலைதளம்!

நாட்டில் வழங்கப்படும் தொழில்நுட்பக் கல்வி தொடர்பான அனைத்து அம்சங்களுக்கும் ஆலோசனை வழங்கும் ஒரு அமைப்பாக, கடந்த 1945ம் ஆண்டு AICTE அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்புக்கென்று எந்த அரசியலமைப்பு ரீதியான அதிகாரங்கள் இல்லையென்றாலும், நாட்டினுடைய தொழில்நுட்ப கல்வி முன்னேற்றத்தில் இந்த அமைப்பு முக்கியப் பங்காற்றியுள்ளது.

இந்த அமைப்பு, தற்போது, படிப்பை முடித்த மாணவர்கள் சரியான பணி வாய்ப்புகளைப் பெறவும், வேலை வாய்ப்பை அளிக்கும் நிறுவனங்கள், தாங்கள் எதிர்பார்க்கும் தகுதியான நபர்களை பணிக்கு அமர்த்திக்கொள்ளவும் உதவும் வகையிலான ஒரு (0 ஐ ஏ.ஐ.சி.டி.இ., அமைப்பு உருவாக்கியுள்ளது. இதை எவ்வாறு பயன்படுத்திக்கொண்டு நன்மையடையலாம் என்பதைக் குறித்து இந்த கட்டுரை விவரிக்கிறது.

இந்த புதிய வலைதளத்தில், ஒரு மாணவர் தன் விபரங்கள் மற்றும் தனது படிப்பு மற்றுமூ புராஜெக்ட் விபரங்களையும், ஒரு நிறுவனம் தன்னைப் பற்றிய விபரங்களையும் பதிவுசெய்ய, பல்வேறான வழிமுறைகள் உள்ளன.

மாணவர் ID மற்றும் Unique ID படிவம்

இந்த போர்டலில் சென்று, மாணவர்கள் தங்களின் அடையாள படிவம் மற்றும் தனித்துவமான அடையான படிவத்தை பெறலாம். அதன்பொருட்டு, அங்கே கேட்கப்பட்டிருக்கும் விபரங்களை முறைப்படி பூர்த்திசெய்ய வேண்டும். சமர்ப்பிக்கப்படும் விபரங்கள் சரியாக இருந்தால் மட்டுமே, தங்களுக்கான ID Form -ஐ மாணவர்கள் பெற முடியும்.

மாணவர் விபரத் தொகுப்பு

மேலும், மாணவர்கள் தங்களின் விபரத் தொகுப்பையும்() உருவாக்க முடியும். இதற்கென, படித்த கல்வி நிறுவனத்தின் பெயர், தொலைபேசி எண், பிறந்த தேதி உள்ளிட்ட பல்வேறு விபரங்களைப் பதிய வேண்டும். இந்த விபரங்களை உள்ளிட்டு, அதற்கான முடிவுகளைப் பெறுவதற்கென முறையான படிநிலை வழிகாட்டுதல்கள் உள்ளன.

விபரத் தொகுப்பில் திருத்தங்களை மேற்கொள்ளலாம். அதேசமயம், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் மற்றும் மொபைல் எண் ஆகியவற்றில் மட்டுமே திருத்தம் மேற்கொள்ள முடியும்.

புராஜெக்ட் பதிவேற்றம்

மாணவர்கள், தாங்கள் மேற்கொண்ட புராஜெக்ட் விபரங்களை பதிவேற்றம் செய்ய முடியும். முறையான கல்வித்தகுதியுள்ள மாணவர்கள் மட்டுமே தங்களின் புராஜெக்ட் விபரங்களை பதிவேற்றம் செய்ய முடியும். இதற்கு படிநிலை முறையிலான வழிகாட்டுதல்கள் உண்டு.

கொடுக்கப்படும் விபரங்கள் மிகச் சரியாக இருப்பது முக்கியம். PDF file மட்டுமே இணைக்க முடியும் என்பதை நினைவில் கொள்க. இளநிலை பட்டம் மற்றும் டிப்ளமோ படிப்பிற்கு 5 MB வரையிலும், முதுநிலை பட்டப் படிப்பிற்கு 20 MB வரையிலும் பதிவேற்றம் செய்யலாம்.

புராஜெக்ட் பதிவிறக்கம்

புராஜெக்ட் பதிவிறக்கம் செய்ய, Download Project Screen tab - ஐ கிளிக் செய்ய வேண்டும். இதற்கும், மிகச் சரியான விபரங்களை உள்ளிடுவது அவசியம். முறையான தகுதியுள்ள மாணவர்கள் மட்டுமே புராஜெக்ட் பதிவிறக்கம் செய்ய முடியும். இதற்கு படிநிலை முறையிலான வழிகாட்டுதல்கள் உண்டு.

CV விபரங்களை பதிவேற்றுதல்

Upload CV Details Screen Tab மூலமாக CV பதிவேற்றத்தை மேற்கொள்ள முடியும். தகுதியுள்ள மாணவர்கள் மட்டுமே மேற்கொள்ளும் இந்த செயல்பாட்டிற்கும் படிநிலை முறையிலான வழிகாட்டுதல்கள் உள்ளன.

பணி தேடுதல்

நிறுவனத்தின் பெயர், பணியின் பெயர், பணி விபரம் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட விபரங்களை தெரிவித்து, பணி தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.

பணிக்கு விண்ணப்பித்தல்

இந்த போர்டலின் மூலமாக ஒருவர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். சரியான தகவல்களை உள்ளிட்டு, பணியைத் தேடலாம். ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 5 பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

நிறுவனங்களுக்கான வாய்ப்புகள்

நிறுவன விபரத்தொகுப்பு

Create Company Profile என்ற பொத்தானை கிளிக் செய்வதன் மூலமாக, ஒரு நிறுவனம் தனக்கான விபரத்தொகுப்பை உருவாக்க முடியும்.

விபரத் தொகுப்பை உருவாக்கிய பின்னர், பணி நிலைகளை உருவாக்க முடியும். ஒரு நிறுவனம் தனது விபரத் தொகுப்பை உறுதிசெய்த பின்னர், அந்த விபரத்தொகுப்பு, Read only என்பதாக மாறிவிடும். தனது விபரத்தொகுப்பில் ஒரு நிறுவனம், திருத்தங்களை மேற்கொள்ளலாம். அதேசமயம், உள்ளிடப்பட்ட நிறுவனத்தின் பெயரை மாற்ற முடியாது.

அனைத்து நிறுவனங்கள்

நிறுவன விபரத்தொகுப்பில், விருப்பமான நிறுவன விபரங்கள் கிடைக்கவில்லை என்றால், அனைத்து நிறுவனங்கள் என்ற திரையில், நிறுவனங்கள் குறித்த தகவலை சேர்க்க முடியும்.

பொருத்தமான ஆட்களை தேடுதல்

ஒரு நிறுவனம், மாணவர் குறித்த விபரங்களை தேட முடியும். முக்கியத் திறன்கள், பணி அனுபவம், உயர்ந்தபட்ச தகுதிகள் மற்றும் விரும்பும் பணியிடம் ஆகிய விபரங்கள் குறித்த தகவல்களை தேடலாம். இதற்கென், முறையான வழிகாட்டல்கள் உள்ளன.

ஆட்களை தேர்வுசெய்தல்

ஒரு நிறுவனம் தனது விருப்பத்திற்கேற்ப, பொருத்தமான மாணவர்களை, மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ள முடியும். தொடர்பு கொள்ளப்பட்ட மாணவர்களின் பட்டியலை, contacted candidates tab -ல் காணலாம்.

மேற்கண்ட அனைத்து விபரங்கள் குறித்த விரிவான தகவல்களை அறிய 


ஆகிய வலைதளங்களுக்கு செல்க.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement