Ad Code

Responsive Advertisement

எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான ராஜீவ் காந்தி தேசிய பெல்லோஷிப் திட்டம்

எஸ்.சி., எஸ்.டி., பிரிவைச் சேர்ந்த மாணவர்கள், முழுநேரமாகவோ அல்லது பகுதிநேரமாகவோ, எம்.பில்., மற்றும் பிஎச்.டி., படிப்புகளை மேற்கொள்வதற்கான உதவிகளை வழங்குவதே, ராஜீவ்காந்தி தேசிய பெல்லோஷிப் திட்டம்.அறிவியல், மானுடவியல், சமூக அறிவியல் மற்றும் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில், ஆய்வு படிப்புகளை மேற்கொள்ளலாம்.


மத்திய சமூகநீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் பழங்குடியின விவாகரங்கள் அமைச்சகம் ஆகியவை இந்த உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்துகின்றன.

தகுதி

விண்ணப்பதாரர்கள், தங்களின் முதுநிலைப் படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். மெரிட் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். முதுநிலைப் படிப்பை நிறைவுசெய்து பட்டம் பெற்ற 2 ஆண்டுகளுக்குள், தங்களுக்கான முதல் வாய்ப்பில், எம்.பில்., அல்லது பிஎச்.டி., படிப்பிற்கு பதிவு செய்திருக்க வேண்டும். மேற்கண்ட காலஅளவு நீட்டிக்கப்பட மாட்டாது.

விண்ணப்பித்தலுக்கான இறுதி நாள் - ஆகஸ்ட் 25.

உதவித்தொகை எவ்வளவு மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் குறித்த அனைத்து விபரங்களையும் அறிய http://www.ugc.ac.in/ugc_schemes/.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement