Ad Code

Responsive Advertisement

அரசு வழக்கறிஞர் பணி சான்றிதழ், நேர்காணல் 3 நாட்கள் நடக்கிறது: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப்பணி யாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நேற்று வெளியிட்ட அறிவிப்பு: 
தமிழ்நாடு பொதுபணியில் அடங்கிய உதவி அரசு வழக்குரைஞர் நிலை2 பதவிக்கான 90 காலிப்பணியிடத்திற்கான நேரடி நியமனத்திற்காக எழுத்துத் தேர்வு ஏப்ரல் 27, 28ம் தேதிகளில் நடந்தது. 
தேர்வில் விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண், இட ஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர்காணல் தேர்விற்கு தேர்வு செய்யப்பட்ட 128 விண்ணப்பதாரர் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணைய தளம் www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டது.
நேர்காணல் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் மூலமும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த 128 விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் ஜூலை 30, 31 மற்றும் ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெறும். இது குறித்த தகவலை தேர்வாணைய இணையதளம் www.tnpsc.gov.in பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement