Ad Code

Responsive Advertisement

பி.எட்., படிப்பிற்க்கு விண்ணப்பிக்க‌ 31‍ந் தேதி வரை காலஅவகாசம்: துணைவேந்தர் விஸ்வநாதன் அறிவிப்பு

 தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் முதல்முறையாக இந்த வருடம் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பி.எட்., கல்லூரிகளில் உள்ள பி.எட் இடங்களில் மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்காக கலந்தாய்வை நடத்த  உள்ளது. இந்த கல்லூரிகளில் 300 இருக்கின்றன.  இந்த இடங்களில் சேர ஆன்லைன் மூலம் பட்டதாரிகள்  வருகிறார்கள். இன்றுடன் (திங்கட்கிழமை) விண்ணப்பிக்கும் தேதி முடிவடைவதாக இருந்தது. 


 இந்த நிலையில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பட்ட படிப்பு தேர்வு முடிவு சமீபத்தில் தான் வெளியிடப்பட்டது.  எனவே பி.எட் படிப்பிற்க்கு விண்ணப்பிக்க‌  31‍ந் தேதி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது பற்றி  தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் விஸ்வநாதன் கூறுகையில் 29ந் தேதி முதல் 31‍ந் தேதி வரை விண்ணப்பிப்பவர்கள் சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், அசோக் நகரில் உள்ள ஸ்டெல்லா மேட்டிட்டியூடினா பி.எட்., கல்லூரி,     சைதாப்பேட்டையில் உள்ள  அரசு பி.எட்., கல்லூரிகளில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதுவரை 8ஆயிரம் பட்டதாரிகள் விண்ணபித்துள்ளனர் என்றார்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement