Ad Code

Responsive Advertisement

பி.ஆர்க் 2ம் கட்ட கலந்தாய்வு ஜூலை 30ல் துவக்கம்


கட்டடவியல் பொறியியல் படிப்பான பி.ஆர்க். படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 30ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை இரண்டு நாள்கள் நடத்தப்பட உள்ளது. பி.இ., பி.டெக். படிப்புகளைப் போல் ஐந்தாண்டு பி.ஆர்க். (கட்டடவியல் பொறியியல்) படிப்புக்கும் ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. முதல் கட்ட கலந்தாய்வில் மிதமுள்ள இடங்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
ஜூலை 30ம் தேதி காலை 9 மணிக்கு 256.40 கட்-ஆப் மதிப்பெண் முதல் 237.00 வரை கலந்தாய்வு நடக்கிறது. ஜூலை 31ம் தேதி காலை 9 மணிக்கு 232.50 கட்-ஆப் மதிப்பெண் முதல் மாலை 2 மணி வரை 212.40 மதிப்பெண்ணுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. கூடுதல் தகவல்களுக்கு அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement