Ad Code

Responsive Advertisement

பிளஸ் 2, 10ம் வகுப்பு முதல் பருவத்தேர்வு! வரும் 31ல் துவக்கம்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வுகளுக்கு முந்தையான கல்வியாண்டுகளின் கேள்வித்தாள்களைத் தொகுத்து முதல் பருவத்தேர்வு, காலாண்டு போன்ற தேர்வுகளின் கேள்விகள் கேட்கப்படும். 6, 7, 8 வகுப்புகளுக்கு பள்ளி அளவிலேயே கேள்வித்தாள் தயார் செய்யப்பட்டு தேர்வுகள் நடத்தப்படும். இந்நிலையில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டிற்கான முதல் பருவத் தேர்வுகள் திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் 31ல் துவங்கி; ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடக்கிறது.


மாவட்ட கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு: பிளஸ் 2 வகுப்புகளுக்கு 31ம்தேதி காலை விலங்கியல், நுண்ணுயிரியல், செவிலியர் பாடம், உணவூட்டமும் உடல்நலவியலும், கணிதம், பொருளியல், கணக்கு பதிவியல் மற்றும் தணிக்கை இயல் செய்முறை- 1 ஆகிய தேர்வுகளும், மதியம் தமிழ் தேர்வும் நடக்கிறது. ஆகஸ்ட் 1ல் காலை இயற்பியல், புவியியல், கணக்குப்பதிவியல், கணக்கு பதிவியலும் தணிக்கையியலும் செய்முறைத் தேர்வு- 11 ஆகிய தேர்வுகளும் மதியம் ஆங்கில தேர்வும், 4ம் தேதி காலை வேதியியல், வணிகவியல், உளவியல் தேர்வுகளும், மதியம் வரலாறு மற்றும் மனையியல் உள்ளிட்ட பாடங்களில் தேர்வு நடைபெற உள்ளது. 

ஆகஸ்ட் 5ம் தேதி காலை தாவரவியல், புள்ளியியல், அரசியல் அறிவியல் அறஇயலும் இந்திய பண்பாடும், சிறப்புத் தமிழ், வணிகக் கணிதம், உயிரியல் ஆகிய தேர்வுகளும், மதியம் கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிர் வேதியியல், அனைத்து தொழிற்பிரிவு கருத்தியல் தேர்வுகளும் நடக்கிறது.

பத்தாம் வகுப்பிற்கு ஜூலை 31ம் தேதி காலை கணிதமும், மதியம் தமிழ் பாடமும், ஆகஸ்ட் 1ம் தேதி காலை அறிவியல், மதியம் ஆங்கிலம், ஜூலை 4ம் தேதி காலை சமூக அறிவியல் பாடத்தேர்வுகளும் நடக்கிறது. தேர்வு இல்லாத வேளைகளில் திருப்புதல் தேர்வுகளை நடத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement