Ad Code

Responsive Advertisement

எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ் :முதல் கட்ட கலந்தாய்வு கட்-ஆஃப் என்ன?

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். முதல் கட்டகலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்துள்ள நிலையில், படிப்பில்சேர காத்திருக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உதவும்கலந்தாய்வுக்கு பிந்தைய அதிகாரப்பூர்வ கட்-ஆஃப் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
முதல் கட்ட எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு நிறைவுக்குப் பிறகு அரசு மருத்துவக்கல்லூரிகளில் அனைத்துப் பிரிவு மாணவர்களைப் 
பொருத்தவரை பொது தரவரிசை எண் 632-லும் (கட்-ஆஃப் மதிப்பெண்199.25), பிற்படுத்தப்பட்ட வகுப்பை (பி.சி.) சேர்ந்தமாணவர்களுக்கு அவர்களது வகுப்பு வாரி எண் 957-லும் (கட்-ஆஃப் மதிப்பெண்198.50) படிப்பில் சேர அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட 18 அரசு மருத்துவக் கல்லூரிகளின் 2,023 எம்.பி.பி.எஸ்.இடங்களில் சேர்ந்த மாணவர்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் 498அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களில் சேர்ந்த மாணவர்கள்,சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியின் 85 பி.டி.எஸ்.இடங்களில் சேர்ந்த மாணவர்கள் என முதல் கட்ட கலந்தாய்வு நிறைவடைந்த பிறகு கட்-ஆஃப் மதிப்பெண் விவரம் (வகுப்பு வாரியாக)கீழே அளிக்கப்பட்டுள்ளது. 
எம்.பி.பி.எஸ். எம்.பி.பி.எஸ் 

வகுப்பு அரசு சுயநிதிஅரசு அரசு பி.டி.எஸ். . 
ஓ.சி. 199.25 198.25 198.25 
பி.சி. 198.50 198.00 198.00 
பி.சி.(எம்) 197.50 197.00. 197.00 
எம்.பி.சி. 197.75 197.00 197.25 
எஸ்.சி. 195.25 193.50 194.25 
எஸ்.சி.(ஏ) 192.50 190.75. 192.00 
எஸ்.டி. 188.00 185.75 187.50

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement