Ad Code

Responsive Advertisement

பள்ளிகளில் உதவியாளர் பணியிடம்; பட்டியல் தயாரித்து அனுப்ப உத்தரவு.

கல்வி அலுவலகங்கள் மற்றும் அரசு உயர்நிலைமற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்கள் குறித்து பட்டியல் தயாரித்து அனுப்ப, பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், கல்வி அலுவலகங்களில் உதவியாளர் பணியிடம் உள்ளது;
பெரும் பாலான பள்ளிகளில், உதவியாளர்பற்றாக்குறை நிலவுகிறது. பணி ஓய்வு பெறும் உதவியாளர்களுக்கு, மீண்டும் அப்பணியிடத்தில் உதவியாளர் நியமிக்கப்படுவதில்லை. 

இதனால், கல்வி அலுவலகங்கள், பள்ளிகளில் உதவியாளர் பற்றாக்குறையால், ஆசிரியர்களே, உதவியாளர் சார்ந்த பணிகளிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.இலவச சீருடை, பாடப்புத்தகங்கள், பஸ் பாஸ், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட மாணவர் கல்வி நலனுக்காக பல்வேறு உதவி திட்டங்களை அரசு செயல்படுத்தி வரும் நிலையில், அதுசார்ந்த பணிகளை செய்ய உதவியாளர் பணியிடம் அவசியமாகிறது.பல பள்ளிகளில், உதவியாளர் இல்லாததால், அப்பணிகளையும் ஆசிரியர்களே கவனிக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால், வகுப்பறைகளுக்கு சென்று பாடம் நடத்தும் நேரம் குறைகிறது. கல்வி கற்பித்தலும் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள கல்வி அலுவலகங்கள், அரசு உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்கள் குறித்த விவரங்களை, பட்டியலாக தயாரித்து அனுப்புமாறு, பள்ளி கல்வித்துறை சார்பில், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement