Ad Code

Responsive Advertisement

பி.எட். ஆசிரியர் கவுன்சிலிங் ஆன் லைனில் நடத்த திட்டம்!!!

இந்த வருடம் பி.எட். ஆசிரியர் கவுன்சிலிங்ஆன் லைனில் நடத்த திட்டம்:துணைவேந்தர் தமிழகத்தில் 7 அரசு பி.எட்கல்லூரிகளும் 14 அரசு
உதவிபெறும் பி.எட் கல்லூரிகளும்செயல்பட்டு வருகின்றன. மொத்த 2400பி.எட். இடங்களும் 450 எம்.எட் இடங்களும்உள்ளன.


இது தவிர 600–க்கும் மேற்பட்ட தனியார்கல்வியியல் கல்லூரிகளும் இயங்கிவருகின்றன. அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ளஇடங்கள் அனைத்தும் ஒற்றைசாளரமுறையில் நிரப்பப்படுகின்றன.

இதற்கான விண்ணப்பம் வினியோகம்செய்யப்பட்டு அந்தந்த மாவட்டங்களில்பெறப்பட்டு பின்னர் சென்னையில்கலந்தாய்வு நடத்தப்படும்.

பட்டப் படிப்புக்களில் எடுத்த மதிப்பெண்அடிப்படையில் தரவரிசைப் பட்டியல்தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு அழைப்புகடிதம் அனுப்பப்படும் அதன் பிறகுகலந்தாய்வில் அவர்கள் பங்கேற்பார்கள்.

நீண்ட நாட்கள் இதற்கான செயல்முறைகள்வகுக்கப்பட்டு கவுன்சிலிங் நடத்தப்படும்.

இது கால நேரத்தை வீணாக்குவதோடுகல்லூரி ஊழியர்களின் வேலைப்பளுவையும்அதிகரித்து வந்தது.

சென்னையில் லேடி வெலிங்டன் ஆசிரியர்பயிற்சி கல்லூரி வளாகத்தில் சாமியானாபந்தல் போடப்பட்டு இருக்கைகள், பல்வேறுவசதிகள் செய்து தருவதில் பணச் செலவும்அதிகரித்தது. இதனால் இந்த வருடம்பி.எட்.மாணவர் சேர்க்கையைஎளிமைப்படுத்தும் விதமாக தேவையற்றஅலைச்சல், கால நேரத்தை வீணாக்காமல்இருக்க ஆன் லைன் மூலமாக நடத்ததமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல்பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.

இந்த பல்கலைக்கழகம்தான் அனைத்துபி.எட் மற்றும் எம்.எட் கல்லூரிகளையும்கட்டுப்பாட்டுக்குள் வைத்து செயல்படுத்திவருகிறது.

மாணவர் சேர்க்கை, பாடத்திட்டம் தேர்வுமுறைகள் போன்றவற்றை ஆசிரியர்கல்வியியல் பல்கலைக்கழகம் தயாரித்துசெயல்படுத்தி வருகிறது.

இந்த பல்கலைக்கழகத்தில்துணைவேந்தராக ஜி.விஸ்வநாதன்பொறுப்பேற்று பல்வேறு புதிய முயற்சிகளைமேற்கொண்டு வருகிறார்.

பி.எட். மாணவர் சேர்க்கை குறித்து துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் கூறியதாவது:–

இந்த வருடம் பி.எட் மற்றும் எம்.எட் மாணவர்சேர்க்கையில் புதிய மாற்றம் கொண்டுவரமுடிவு செய்துள்ளோம். மாணவ –மாணவிகளை சென்னைக்கு அழைக்காமல்அந்தந்த மாவட்டங்களில் உள்ள கல்வியியல்கல்லூரிகளில் மூலமாக ஆன் – லைன்வழியாக கலந்தாய்வு நடத்தலாமா என்றுஆலோசித்து வருகிறோம்.

இதுபற்றி விரைவில் முடிவு செய்துஅறிவிப்போம். மாணவர் சேர்க்கைக்கானதேதியும் அறிவிக்கப்படும் விண்ணப்பங்கள்நேரிலோ, கல்லூரிகளிலோ வாங்கத்தேவையில்லை.

ஆன்– லைன் மூலமாக பூர்த்தி செய்துசமர்ப்பிக்க ஏற்பாடு செய்து வருகிறோம்.இந்தத் திட்டம் சிறப்பாக அமையும் பட்சத்தில்இனிவரும் காலங்களில் ஆன்– லைன்கலந்தாய்வு மூலம் கல்லூரிகளை தேர்வுசெய்யலாம்.

இதன் மூலம் வெளியூர்களில் இருந்துசென்னைக்கு வந்து தங்கி அலைவதுமிச்சமாகும்.


இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement