Ad Code

Responsive Advertisement

மழைநீர் சேகரிப்பு ஓவியப்போட்டி: ஜூலை 7ல் சென்னையில் நடக்கிறது

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, மாநில அளவிலான மழைநீர் சேகரிப்பு குறித்த கண்காட்சி மற்றும் ஓவியப்போட்டி, சென்னையில் ஜூலை 7ல் நடக்கிறது.
'தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும், ஜூன் 30க்குள், மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்த வேண்டும்' என, பள்ளிகல்வித் துறை உத்தரவிட்டது. அதற்கான பணிகள் நடக்கின்றன. மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி, பள்ளி மாணவர்களின் ஊர்வலம், மாவட்ட அளவிலான ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான, மாநில அளவிலான மழைநீர் சேகரிப்பு குறித்த கண்காட்சி மற்றும் ஓவியப்போட்டி, ஜூலை 7ல், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, சுங்குவார்சத்திரம் அருகில் உள்ள, மகரிஷி பன்னாட்டு உண்டு உறைவிடப்பள்ளியில் நடக்கிறது.
கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பள்ளிக்கல்வித் துறை சார்பில், இப்போட்டிகள் நடக்கின்றன. 6 - 8ம் வகுப்பு; 9 - 10ம் வகுப்பு; பிளஸ் 1, பிளஸ் 2 என, மூன்று பிரிவுகளில், மாவட்டத்தில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த, இரு மாணவர்கள் வீதம் ஆறு பேர் என, 32 மாவட்டங்களில் இருந்து, 192 பேர் கலந்து கொள்கின்றனர். மூன்று பிரிவுகளிலும், முதல் மூன்று இடங்களைப் பெறுவோருக்கு, 22 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும். வரும், ஜூலை 6ம் தேதி மாலை, 5:00 மணிக்கே, மாணவர்கள் தங்களது பெயர்களை, அங்கே முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். அவர்களுடன் இரு ஆசிரியர்களும் செல்ல வேண்டும். மாவட்டங்களில் இதற்கான ஏற்பாடுகளை முதன்மைக்கல்வி அதிகாரிகள் செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement