Ad Code

Responsive Advertisement

5-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு "ஹெட் ஸ்டார்ட்' ஒலி வழி ஆங்கில பயிற்சி

ஒரு லட்சம் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சியளிக்க வித்யாரம்பம் அறக்கட்டளை திட்டமிட்டுள்ளதாக அதன் நிறுவனர் ரெங்கநாதன் தெரிவித்தார்.

வித்யாரம்பம் அறக்கட்டளை சார்பில் ஆங்கிலப் பயிற்சி பெற்ற குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுடைய செயல்பாடுகளுக்கான பாராட்டு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் பேசியது:
தற்போது கல்வி என்பது வியாபாரமாக மாறிவிட்ட நிலையில், பொறுப்புணர்ந்து கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் குறைந்துவிட்டனர். உலக அளவில் மாணவர்கள் சாதிக்க ஆங்கில அறிவு அத்தியாவசியமானதாகிவிட்டது. அதற்காக தாய்மொழியை மறந்து ஆங்கிலத்தை கற்க வேண்டும் என்பதல்ல. பிறமொழி அறிவும் அவசியம் என்றார்.
வித்யாரம்பம் அறக்கட்டளையின் நிறுவனர் ரெங்கநாதன் கூறியது:
அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு எளிய முறையில் ஆங்கில பயிற்சி வகுப்புகளை இந்த அறக்கட்டளை நடத்தி வருகிறது. தற்போது "ஹெட் ஸ்டார்ட்' என்ற புதிய திட்டத்தின் மூலம் ஒலி வழி ஆங்கில பயிற்சி வகுப்புகளை 5-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளோம்.
இந்த அறக்கட்டளையில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், 10 மாவட்டங்களில் ஒரு லட்சம் மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சியை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement