Ad Code

Responsive Advertisement

பெண்களுக்கு கூடுதல் வரி விலக்கு ரூ.3½ லட்சமாக அறிவிக்கப்படும் -சலுகை பட்ஜெட்டில் அறிவிக்கப்படுகிறது

 மத்திய அரசின் பொது பட்ஜெட் அடுத்த மாதம் (ஜூலை) 10–ந்தேதி (வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த நிதி நிலை அறிக்கையை தயார் செய்யும் பணியில் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.


ஈராக் உள்நாட்டு போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்ந்துள்ளதால் அது இந்திய பொருளாதாரத்திலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. எனவே அதற்கு ஏற்ப பட்ஜெட்டில் புதிய திட்டங்கள், சலுகைகள் இடம் பெறும் என்று தெரிகிறது.
இது தவிர வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ. 3 லட்சமாக உயரும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதோடு வரி வசூல் உள் கட்டமைப்பிலும் பெரிய அளவில் மாற்றங்கள் வர உள்ளது.
மத்திய பட்ஜெட்டில் பெண்களை கவரும் வகையில் பல சலுகைகள் அறிவிக்கப்பட உள்ளதாக மத்திய நிதி அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறினார். மாத சம்பளம் வாங்கும் பெண்களுக்கான வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.3½ லட்சமாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

இதன் மூலம் ஆண்களை விட பெண்களுக்கு கூடுதலாக ரூ. 50 ஆயிரம் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு கிடைக்கும். இது லட்சக்கணக்கான பெண்களை வரி கட்டுவதில் இருந்து விலக்கு பெற வழி வகுக்கும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement