Ad Code

Responsive Advertisement

1 முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடம்: ஜெயலலிதா ஆய்வு

ஒன்று முதல் 10ஆம் வகுப்பு வரையில் தமிழை கட்டாயப் பாடமாக அனைத்து மாநில வாரிய பள்ளிகளும் கடைபிடிப்பது குறித்து
அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா ஆய்வு கூட்டம் நடத்தி்னார்.


2006ஆம் ஆண்டைய தமிழ்நாடு தமிழ் கற்பதற்கான சட்டத்தின்படி, ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பகுதி ஒன்றில் தமிழை கட்டாயப் பாடமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாநில வாரிய பள்ளிகளும் கடைபிடிப்பது குறித்த ஆய்வு கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சபிதா, சட்டத்துறை செயலாளர் கோ.ஜெயச்சந்திரன் மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement