Ad Code

Responsive Advertisement

பாரதியார் பல்கலையில் அஞ்சல் வழி எம்.எட். சேர சலுகை

கோவை பாரதியார் பல்கலைக் கழகம் இந்த ஆண்டு தொலைதூரக் கல்வியில் எம்.எட். படிப்பை அறிமுகப்படுத்துகிறது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பி.எட். முடித்து 2 ஆண்டு ஆசிரியர் அனுபவம் உள்ளவர்கள் எம்.எட். படிப்பில் சேரலாம். அரசு பள்ளியிலோ, அரசு உதவி பெறும் பள்ளியிலோ அல்லது அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளியிலோ தற்போது பணியில் இருக்க வேண்டும்.


பி.எட். படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்று முன்பு கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. தற்போது, 55 சதவீத மதிப்பெண் என் பது 50 சதவீதமாக மாற்றப்பட்டிருப்பதாக பல்கலைக்கழக பதிவாளர் பி.கே.மனோகரன் அறிவித்துள் ளார். எம்.எட். படிப்புக்கு ஜூலை 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நுழைவுத்தேர்வு ஜூலை 20-ம் தேதி நடைபெறுகிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement