Ad Code

Responsive Advertisement

கூடுதல் பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் 'டிரான்ஸ்பர்': தேவையான பள்ளிகளுக்கு மாற்ற கல்வித்துறை முடிவு!

பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்ககல்வித்துறை பள்ளிகளில், கூடுதலாகபணியாற்றும், 3,000 பட்டதாரி ஆசிரியரை,ஆசிரியர் தேவை உள்ள பள்ளிகளுக்கு, 'டிரான்ஸ்பர்' செய்ய, சம்பந்தபட்ட இருதுறைகளும்,
முடிவு செய்துள்ளன.

ஒவ்வொரு வகுப்பிலும், ஆசிரியர் - மாணவர்சராசரி எந்த அளவிற்கு இருக்க வேண்டும்என்பதை, மத்திய அரசு நிர்ணயம்செய்துள்ளது.
ஆசிரியர் பற்றாக்குறை:

அதன்படி, ஆரம்ப பள்ளிகளில், ஒருஆசிரியருக்கு, 30 மாணவர் என்ற வீதத்திலும், 5ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை, 1:35, 9ம்வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, 1:40 என்றவீதத்தில் இருக்க வேண்டும். பிளஸ் 1, பிளஸ்2 வகுப்புகளில், அறிவியல் பிரிவு வகுப்பாகஇருந்தால், 1:40 என்ற வீதத்திலும்,தொழிற்கல்வி பிரிவு வகுப்பாக இருந்தால், 1:25 என்ற வீதத்திலும் இருக்கலாம் என,கணக்கு உள்ளது. தமிழகத்தைபொறுத்தவரை, தேசிய வரையறையை விட,ஆசிரியர் - மாணவர் சதவீதம், குறைவாகவேஉள்ளது. ஆரம்ப பள்ளிகளில், 10 முதல், 20மாணவருக்கு, ஒரு ஆசிரியர் என்ற நிலை,பல இடங்களில் உள்ளது. தேவையை விட,பல பள்ளிகளில், கூடுதல், ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். அதே நேரம்,திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம்உள்ளிட்ட, வட மாவட்ட பள்ளிகளில்,ஆசிரியர் பற்றாக்குறை, அதிகமாக உள்ளது.இந்த சமநிலையற்ற நிலையை மாற்றி,அனைத்துப் பள்ளிகளிலும், ஆசிரியர்பணியாற்றுவதை உறுதி செய்யும் வகையில்,பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துஉள்ளது. தேவையை விட, கூடுதலாகபணியாற்றும் ஆசிரியர் எண்ணிக்கை,ஆசிரியர் பற்றாக்குறை உள்ள ஆசிரியர்பணியிடங்களின் எண்ணிக்கை குறித்து, இருதுறைகளும் விவரம் சேகரித்துள்ளன.
பள்ளி திறப்பதற்குள்...:

அதனடிப்படையில், இரண்டிலும், கூடுதலாகஉள்ள, 3,000 பட்டதாரி ஆசிரியர்களை,தேவை உள்ள பள்ளிகளுக்கு, 'டிரான்ஸ்பர்'செய்ய, இரு துறை அதிகாரிகளும், முடிவுசெய்துள்ளனர். பள்ளி திறப்பதற்குள்,இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும் என,தெரிகிறது. இந்தப் பணி முடிந்த பின், ஜூன்,இரண்டாவது வாரத்தில், ஆசிரியர்களுக்கானபொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும்என, தெரிகிறது. இது குறித்து, அதிகாரிஒருவர் கூறுகையில், 'பணி நிரவல்(டெப்ளாய்மென்ட்) நடவடிக்கையால்,ஆசிரியர்கள், பீதி அடையத் தேவையில்லை.தற்போது ஆசிரியர் பணிபுரியும்மாவட்டத்திற்குள் தான் மாற்றம் இருக்கும்.வேறு மாவட்ட மாறுதல், பெரும்பாலும் வராது'என்றார்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement