Ad Code

Responsive Advertisement

பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளிகளில் புகார் பெட்டி: அரசு உத்தரவு

பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும்  பாலியல் குற்றங்களை  கண்டறிய, அனைத்து  பள்ளிகளிலும்,  புகார் பெட்டிவைக்க, அரசு
உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில்பள்ளிகள், பொது இடங்கள்,  வீடுகளில் தனியாக இருக்கும்,  18 வயதிற்கு  உட்பட்ட பெண்  குழந்தைகளுக்கு  பாலியல் ரீதியான தொந்தரவு  தரப்படுகிறது. இக்குற்றச் சம்பவங்களில்  ஈடுபடுவோர் மீது, கடுமையான  நடவடிக்கை  இல்லை.  இதன்காரணமாக  இக்குற்றங்கள்  அதிகரிக்கின்றன. குறிப்பாக,  பள்ளிகளில்  படிக்கும்  18 வயதிற்குட்பட்ட  சிறுமிகள் மீது,  பாலியல் குற்றச் செயல்கள்  நடைபெறாமல் தடுக்கவேண்டும் என,  குழந்தைகள்  நல பாதுகாப்பு அமைப்புகளுக்கு,  அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக,  தனியார்,  அரசு பள்ளிகளில்  ஆய்வுநடத்தி,  அறிக்கை வழங்க  வேண்டும்.  பள்ளிசிறுமிகள் தைரியமாக,  புகார் தெரிவிக்க ஏதுவாக,  அனைத்து  பள்ளிகளிலும்,  புகார்பெட்டி  வைக்க  அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாதம் ஒரு முறை  இப்புகார்  பெட்டியில்  உள்ள மனுக்களை  தலைமை  ஆசிரியர்கள் எடுக்கவேண்டும்.  மாவட்ட  கல்வி அதிகாரிகள்,  நன்னடத்தை  அலுவலர், குழந்தைகள்  நல பாதுகாப்பு  அலுவலர் உள்ளிட்ட  குழுவினர்  விசாரித்து  தீர்வுகாண வேண்டும்.  புகார்களின்  தன்மையை பொறுத்தே,  சம்பந்தப்பட்ட  குற்றச்செயலில் ஈடுபடுவோர்  மீது,  நடவடிக்கை  எடுக்கப்படும்,  என,  சமூகநலத்துறை  அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement